2025 செப்டெம்பர் 24, புதன்கிழமை

போதை மாத்திரைகளுடன் ஒருவர் கைது

Princiya Dixci   / 2021 மே 10 , பி.ப. 12:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

பாறுக் ஷிஹான், கனகராசா சரவணன்

பட்டா ரக வாகனத்தில் பயணித்து, பழைய இரும்பு வாங்கும் போர்வையில், 590 க்கும் அதிகமான போதை மாத்திரைகள் மற்றும் ஹெரோய்ன் விற்பனை செய்த ஒருவரை, கல்முனை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

கல்முனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கல்முனை மாநகர பிரதான வீதியில் பட்டா வாகனத்தில் சந்தேகத்துக்கிடமாக ஒருவர் நடமாடுவதாக மாவட்ட புலனாய்வுப் பிரிவு மற்றும் விசேட புலனாய்வுப் பிரிவுக்கு நேற்று (09) மாலை இரகசியத் தகவல் கிடைத்துள்ளது.

இதனையடுத்து, மாறுவேடம் அணிந்து சென்ற  கல்முனை பொலிஸார்   சந்தேக நபரைக் கைதுசெய்துள்ளனர்.

கைதானவர் சாய்ந்தமருது பகுதியை சேர்ந்த  25 வயதுடைய இரும்பு சேகரித்து விற்பனை செய்பவர்  எனவும் திருகோணமலை, கிண்ணியாவில் இருந்து இந்த 590 போதை மாத்திரைகள் கடத்தி வரப்பட்டுள்ளதாகவும் ஆரம்ப விசாரணையில் தெரியவந்துள்ளது.

இந்த போதை மாத்திரைகளை அண்மைக்காலமாக பாடசாலை மாணவர்களுக்கு விநியோகித்து வந்துள்ளதாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .