2025 மே 05, திங்கட்கிழமை

போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு

வி.சுகிர்தகுமார்   / 2019 ஜனவரி 24 , பி.ப. 02:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் பணிப்புரைக்கமைவாக, நாடளாவிய ரிதியில் தேசிய போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வுச் செயற்றிட்டம்  சகல பாடசாலைகளிலும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

“போதைக்கு எதிராக பாடசாலையின் பலம்” எனும் தொனிப்பொருளுக்கமைவாக, ஜனவரி 21 முதல் 25 வரை இத்திட்டம், கட்டம் கட்டமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

இதற்கமைவாக, ஆலையடிவேம்பு கல்விக் கோட்டத்துக்குட்பட்ட கோளாவில் விநாயகர் வித்தியாலயத்தில் இன்று (24) காலை இவ்வேலைத்திட்டம் அமுல்படுத்தப்பட்டது.

பாடசாலையின் அதிபர் பி.கிருஸ்ணபிள்ளையின் தலைமையில், போதைப்பொருள் ஒழிப்பு வேலைத்திட்டப் பொறுப்பாசிரியர் கே.கோபாலகிருஸ்ணன் ஒருங்கிணைப்பில் இது இடம்பெற்றது.

இதன்போது, ஆலையடிவேம்பு பிரதேச சபை உறுப்பினர் ரி.பூபாலபிள்ளை, ஆலையடிவேம்பு பிரதேச செயலக நிர்வாக உத்தியோகத்தர் ஆ.சசீந்திரன் உள்ளிட்டவர்கள் கலந்துகொண்டு, போதைப்பொருள் ஒழிப்புத் தொடர்பான விழிப்புணர்வுக் கருத்துகளை மாணவர்களுடன் பகிர்ந்துகொண்டதுடன், அறிவுரைகளையும் வழங்கினர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X