Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 02, வெள்ளிக்கிழமை
Princiya Dixci / 2021 மார்ச் 21 , பி.ப. 02:50 - 0 - {{hitsCtrl.values.hits}}
சகா , பாறுக் ஷிஹான்
அம்பாறை மாவட்டத்தின் நிந்தவூர் பகுதியில் உள்ள அல்லிமூலை அருகில் புதிய நிரந்தர சோதனை சாவடி அமைக்கப்பட்டுள்ளது.
கடந்த புதன்கிழமை (17) மதியம் திடிரென அப்பகுதிக்கு வந்த சுமார் 15க்கும் அதிகமான இராணுவத்தினர், நிந்தவூர் பகுதியில் உள்ள அல்லிமூலை சந்திக்கு அருகே நிரந்தர சோதனை சாவடி ஒன்றை அமைத்து, சோதனை நடவடிக்கையை தொடர்ச்சியாக மேற்கொண்டுள்ளனர்.
அப்பகுதியில் இடம்பெறுகின்ற போதைப்பொருள் கடத்தல்களை முறியடிப்பதற்காக இம்முகாம் அமைக்கப்பட்டுள்ளதுடன், இடையிடையே அம்பாறை மாவட்டத்தின் பல பகுதிகளில் இராணுவ மோட்டார் சைக்கிள் படையணி ரோந்து பணியில் ஈடுபட்டு வருகிறது.
இது தவிர இரவு வேளையில் ஐவர் கொண்ட இராணுவ குழுவொன்று மற்றுமொரு தேடுதல் நடவடிக்கையை முன்னெடுத்து வருகின்றது.
மேலும், இவர்கள் பகல் - இரவு வேளைகளில் வீதிகளில் செல்லும் சந்தேகத்துக்கிடமானவர்கள், வாகனங்களை இடைமறித்து சோதனை செய்து, பாதுகாப்யை உறுதிப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
கொரோனா அனர்த்தத்தின் பின்னர் அம்பாறை மாவட்டத்தில் இடம்பெற்று வரும் கஞ்சா கடத்தல்கள், அனுமதிப் பத்திரமின்றிய மணல் அகழ்வு போன்ற சம்பவங்களை முறியடிப்பதற்காக இந்நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
மேலும், கொரோனா சுகாதார நடைமுறைகளை கண்கானித்தல், முகக்கவசம் அணியாதோரை வழிப்படுத்தல் உள்ளிட்ட பாதுகாப்பு விடயங்கள் குறித்தும் இதன்போது கவனம் செலுத்தப்படுகின்றது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
7 hours ago
01 May 2025
01 May 2025