2025 மே 02, வெள்ளிக்கிழமை

போலி நாணையத் தாள்களுடன் ஒருவர் கைது

Princiya Dixci   / 2021 மார்ச் 22 , பி.ப. 01:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

கனகராசா சரவணன், எம்.எம்.அஹமட் அனாம்

மட்டக்களப்பு, ஓட்டமாவடியில் சப்பாத்துக் கடையொன்றில், போலி 5 ஆயிரம் ரூபாய் கொண்ட நாணையத் தாள்களை வைத்திருந்த ஒருவரை, நேற்றிரவு (21) கைது செய்துள்ளதாகவும் அவரிடமிருந்து போலி 20 நாணையத் தாள்களையும் விசேட அதிரடிப்படையினரால் மீட்கப்பட்டு, ஒப்படைத்துள்ளதாகவும் வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்தனர்.

வாழைச்சேனை விசேட அதிரடிப்படையினருக்கு கிடைத்த தகவலுக்கு அமைய, நேற்றிரவு விசேட அதிரடிப்படையினர் குறித்த சப்பாத்து விற்பனை செய்யும் கடையை சுற்றிவளைத்து சோதனை நடவடிக்கையை மேற்கொண்டனர்

இதன்போது, ஒரு இலட்சம் ரூபாய் பெறுமதியான 5,000 ரூபாய் போலி நாணயத் தாள்கள் கைப்பற்றப்பட்டுள்ளதுடன், வியாபார நிலையத்தில் கடமையாற்றிய இளைஞனைக் கைதுசெய்துள்ளனர். 

இப்பிரதேசத்தில் இன்னும் போலி நாணத்தாள்கள் இருக்கலாம் என்ற சந்தேகத்திலும், இதனுடன் பல வியாபாரிகளுக்கும் தொடர்பு இருக்கலாம் என்ற சந்தேகத்தில் சில வர்த்தக நிலையங்கள் சோதனைக்கு உட்படுத்தப்படவுள்ளதாகவும், போலி நாணயத்தாள்கள் கைப்பற்றப்பட்ட வர்த்தக நிலையத்தின் உரிமையாளர் தலைமறைவாகியுள்ளார் எனவும் வாழைச்சேனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தனஞ்ஜய பெரமுன தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .