2025 செப்டெம்பர் 25, வியாழக்கிழமை

மாயக்கல்லிமலை விவகாரம்; அம்பாறையில் ஹர்த்தாலுடன் கண்டனப் பேரணி

Suganthini Ratnam   / 2017 ஏப்ரல் 27 , மு.ப. 10:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ரீ.கே.றஹ்மத்துல்லா

இறக்காமம் பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட  மாணிக்கமடு மாயக்கல்லிமலைப் பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்டுவரும் நில ஆக்கிரமிப்பைக் கண்டித்து ஹர்த்தால் மற்றும் கண்டனப் பேரணியை அம்பாறை மாவட்டத்தில் நாளைநடத்துவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என அப்பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் யு.கே.ஜெபீர் மௌலவி தெரிவித்தார்.

இறக்காமம் பொது அமைப்புகளின் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் ஹர்த்தாலும் கண்டனப் பேரணியும் முன்னெடுக்கப்படுகின்றது எனவும் அவர் கூறினார்.  

அம்பாறை மாவட்டம் முழுவதிலும் நாளை  கடையடைப்பு  மேற்கொள்ளப்பட்டு ஹர்த்தால் அனுஷ்டிக்கப்படுவதுடன், ஜூம்மா தொழுகையின் பின்னர் கண்டனப் பேரணி இடம்பெறும்.

அம்பாறை மாவட்டத்தின் ஒவ்வொரு பிரதேச செயலகங்களிலும் உள்ள ஜும்மா பள்ளிவாசல்களிலிருந்து பேரணி ஆரம்பமாகி  அவ்வப் பிரதேச செயலகங்களைச நோக்கிச் செல்வதுடன், பிரதேச செயலாளர்களிடம் மகஜர்களும்; ஒப்படைக்கப்படும் எனவும் அவர் கூறினார்.

இந்தக் கண்டனப் பேரணியில்; கட்சி பேதங்களுக்கு அப்பால் சகல மக்களும் கலந்துகொள்ளுமாறும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .