Kogilavani / 2016 மார்ச் 10 , மு.ப. 03:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
பைஷல் இஸ்மாயில்
வருடமொன்றுக்கு சுமார் 2,500 பெண்கள், மார்பகப்புற்று நோயினால் பாதிப்புக்குள்ளாகி வருவதாக கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஏ.எல்.முஹம்மட் நஸீர் தெரிவித்தார்.
தேசிய புற்றுநோய் ஒழிப்பு பிரிவு இத்தகவல் வெளியிட்டுள்ளதாகவும் அவர் கூறினார். கிழக்கு மாகாண சுகாதார அமைச்சில் நேற்று காலை (09) இடம்பெற்ற உயரதிகாரிகளுடனான சந்திப்பின்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
அவர் மேலும் கூறுகையில், 'கிழக்கு மாகாண பெண்கள் மார்கப்புற்றுநோய்க்கான பரிசோதனைகளை மேற்கொள்வதற்கு தயக்கமும் வெட்கமும் அடைகின்றனர். வெட்கமும் தயக்கமும் இருக்கும்வரை உடலிலுள்ள நோய்களை கடைசிவரையும் கண்டறிய முடியாது.
சிலர் கடைசி நேரத்தில், தங்களின் நோய்கள் பெறிதாக்கிய பின்னர், சிகிச்சை பெறச் செல்கின்றனர். இதனால் வருடமொன்றுக்கு 500இற்கும் மேற்பட்ட பெண்கள் உயிரிழக்கும் நிலைமைக்கு ஆளாகி வருகின்றனர்' என்றார்.
இந்நோயிலிருந்து பெண்களை பாதுகாக்க எவ்வாறான வழிமுறைகளை நாம் கையாளலாம். என்ன திட்டங்களை பொதுமக்கள் மத்தியில் முன்வைக்கலாம் என்ற கருத்தையும்; சுகாதார அமைச்சர் ஏ.எல்.முஹம்மட் நஸீர் அதிகாரிகளுக்கு முன்வைத்தார்.
41 minute ago
1 hours ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
41 minute ago
1 hours ago
1 hours ago