2025 செப்டெம்பர் 28, ஞாயிற்றுக்கிழமை

மகள் கொலை: தாயின் மறியல் நீடிப்பு

Thipaan   / 2017 மார்ச் 31 , மு.ப. 11:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.எஸ்.எம். ஹனீபா

அம்பாறை, மத்தியமுகாம் 11ஆம் கொலனி பிரதேசத்தில் மகளை அடித்துக் கொலை செய்த சந்தேக நபரான தாயாரை, எதிர்வரும் ஏப்ரல் மாதம் 04ஆம் திகதி வரை தொடர்ந்து விளக்கமறியலில் வைக்குமாறு கல்முனை நீதவான் நீதிமன்ற பதில் நீதவான் தாஹா செயினுதீன், வெள்ளிக்கிழமை (31) உத்தரவிட்டார்.

கடந்த 2016ஆம் ஆண்டு மே மாதம் 31ஆம் திகதி, தாய்க்கும் மகளுக்கும் இடையில், மதம் மாறியமை தொடர்பில் வாய்த்தர்க்கம் ஏற்பட்டதைத் தொடர்ந்து, தாய் கட்டில் பலகையால் மகள் மீது தாக்கியுள்ளார். தாக்குதலில் உயிரிழந்த மகளின் சடலத்தை வீட்டின் பின்புறத்தில் கிடங்கு வெட்டி தாய் புதைத்துள்ளதாக விசாரணையிலிருந்து தெரியவந்தது.

தனது வளர்ப்பு மகளான செல்வநாயகம் ஜனனி (வயது 21) என்பவரை அடித்துக் கொலை செய்துவிட்டு, சடலத்தை புதைத்த சம்பவத்தை தொடர்ந்து, அம்மகளின் தாய் (வயது 55)   கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

சந்தேக நபரை   கல்முனை  பதில் நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்திய போதே மேற்கண்டவாறு உத்தரவிட்டுள்ளார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X