Janu / 2026 ஏப்ரல் 02 , பி.ப. 03:32 - 0 - {{hitsCtrl.values.hits}}
மட்டக்களப்பு - கல்முனை பிரதான வீதியில், நாவற்குடா பகுதியில் புதன்கிழமை (01) இரவு இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் 22 வயதுடைய இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். மேலும் இருவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
புதன்கிழமை (01) இரவு 8.30 மணியளவில் காத்தான்குடியிலிருந்து மட்டக்களப்பு நோக்கி ஒரே திசையில் இரு மோட்டார் சைக்கிள்கள் பயணித்துக்கொண்டிருந்தன. இதன்போது, பின்னால் வந்த மோட்டார் சைக்கிள் முன்னால் சென்ற மோட்டார் சைக்கிளின் புகைபோக்கியுடன் (Silencer) மோதியதில் இவ்விபத்து நேர்ந்துள்ளது.
இதில் 22 வயதுடைய இளைஞர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததுடன், ஏனைய இருவர் படுகாயமடைந்த நிலையில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
உயிரிழந்த இளைஞர் கத்தார் நாட்டில் பணிபுரிந்து வந்தவர் என்பதும், விடுமுறைக்காக தாய்நாடு வந்திருந்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. தனது விடுமுறையை முடித்துக்கொண்டு எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை மீண்டும் கத்தார் செல்லவிருந்த நிலையிலேயே இவ்விபத்தில் அவர் உயிரிழந்துள்ளார்.
விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை காத்தான்குடி போக்குவரத்துப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
கனகராசா சரவணன்
3 hours ago
8 hours ago
8 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
8 hours ago
8 hours ago