2025 மே 03, சனிக்கிழமை

மடிக்கணினிகள் 6ஐ திருடிய ஐவருக்கு விளக்கமறியல்

Princiya Dixci   / 2021 ஏப்ரல் 12 , மு.ப. 11:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

பாறுக் ஷிஹான், சகா

அம்பாறை, சம்மாந்துறை அல் முனீர் பாடசாலை அதிபர் காரியாலயத்தை உடைத்து, அங்கிருந்த அலுமாரியில் வைக்கப்பட்டிருந்த 6 புதிய மடிக்கணினிகளைத் திருடிய 5 சந்தேகநபர்களை 14 நாட்கள்   விளக்கமறியலில் வைக்குமாறு,  சம்மாந்துறை நீதவான் ஐ.என் றிஸ்வான் உத்தரவிட்டுள்ளார்.

தலா 150,000 ரூபாய் பெறுமதியான மடிக்கணினிகள் 6 திருடப்பட்டுள்ளதாக கடந்த 05 ஆம் திகதி சம்மாந்துறை பொலிஸாருக்கு முறைப்பாட்டு கிடைக்கப் பெற்றிருந்தது.

இம்மாதம் 01ஆம் திகதி இறுதியாக பாடசாலை செயற்பாடுகள் நடைபெற்று அனைத்தும் பூட்டப்பட்டிருந்தது. பின்னர் தொடர்ச்சியாக 3 நாட்கள் விடுமுறையின் பின்னர் திங்கட்கிழமை பாடசாலைக்கு சென்ற அதிபர், தனது அறை உடைக்கப்பட்டு, மடிக்கணனிகள் திருடப்பட்டுள்ளதை அவதானித்துள்ளார்.

இதற்கமைய, பொலிஸாரிடம் அதிபர் முறைப்பாடு செய்ததற்கமைய பொலிஸ் குழுவினர், சம்மாந்துறை பிரதேசத்தைச் சேர்ந்த 20, 23,25,30 வயதுகளையுடைய 5 சந்தேகநபர்களைக் கைதுசெய்துள்ளனர்.

இருந்து திருடப்பட்ட 6 மடிக்கணினிகள் மற்றும் உதிரிப்பாகங்கள் அனைத்தும் மேற்படி கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து மீட்கப்பட்டுள்ளதாக சம்மாந்துறை பொலிஸார் தெரிவித்தனர்.

தொடர்ந்து சம்மாந்துறை நீதிமன்ற நீதவான் முன்னிலையில் நேற்று (11) சந்தேகநபர்கள் ஆஜர்படுத்தப்பட்டதை அடுத்து, அந்த ஐவரையும் 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு  நீதவான் உத்தரவிட்டுள்ளார். 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X