Princiya Dixci / 2020 டிசெம்பர் 27 , பி.ப. 01:41 - 0 - {{hitsCtrl.values.hits}}

அஸ்லம் எஸ்.மௌலானா, பி.எம்.எம்.ஏ.காதர், பைஷல் இஸ்மாயில்
இலங்கையின் கலை, இலக்கியப் பரப்பில் ஆழமாக தடம்பதித்த தென்கிழக்கின் இலக்கிய ஆழுமையான, ஓய்வுபெற்ற கல்முனை வலயக் கல்விப் பணிப்பாளரும் கிழக்கு மாகாண முஸ்லிம் கலாசார முன்னாள் பணிப்பாளருமான மணிப்புலவர் மருதூர் ஏ.மஜீட், தனது 80ஆவது வயதில் நேற்று (26) காலமானார்.
ஜனாஸா, அவரது சொந்த ஊரான சாய்ந்தமருது அக்பர் பள்ளி மையவாடியில் நேற்று மாலை நல்லடக்கம் செய்யப்பட்டது.
கலை, இலக்கியத்தில் அதிக நாட்டம் கொண்ட இவர், இதுவரை இருபது நூல்களை எழுதியுள்ளதுடன், இளம் எழுத்தாளர்களை ஊக்குவிப்பதில் முன்னிலையாக செயற்பட்டுள்ளார்.
மருதூர் ஏ.மஜீட், உதவிக் கல்விப் பணிப்பாளராக, பிரதிக் கல்விப் பணிப்பாளராக, கல்விப் பணிப்பாளராக் கடமையாற்றி ஒய்வுபெற்றார்.
இவரது மறைவு குறித்து அரசியல் தலைவர்களும் மூத்த கலை, இலக்கியவாதிகள் பலரும் அனுதாபம் வெளியிட்டுள்ளனர்.
3 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
3 hours ago