2025 ஜூலை 08, செவ்வாய்க்கிழமை

மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு

Kogilavani   / 2015 நவம்பர் 20 , மு.ப. 09:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

-வி.சுகிர்தகுமார்  

மானிய அடிப்படையில் மோட்டார் சைக்கிள்கள் வழங்காமை தொடர்பில் அகில இலங்கை கிராம உத்தியோகத்தர் சங்கத்தினால் மனித உரிமை ஆணைக்குழுவிடம் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

அரச உத்தியோகத்தர்களுக்கு வழங்கப்பட்ட மோட்டார் சைக்கிள்கள் அனைத்து மாவட்டங்களிலும் அனைத்து கிராம உத்தியோகத்தர்;களுக்கும் வழங்கப்பட்ட போதிலும் அம்பாறை மாவட்டத்தின் சிலருக்கு மாத்திரமே வழங்கபட்டுள்ளது.

இதனால், கிராம உத்தியோகத்தர்கள் அடங்களாக பல கள உத்தியோகத்தர்கள் பாதிக்கப்பட்டதாக கூறி,  அகில இலங்கை கிராம உத்தியோகத்தர்கள் சங்க தலைவர் டபிள்யு.எம்.பி.பி.வன்னிநாயக்க கொழும்பிலுள்ள மனித உரிமை ஆணைக்குழுவில் புதன்கிழமை(18) முறைப்பாடு செய்துள்ளதாக அம்பாறை மாவட்ட கிராம உத்தியோகத்தர் சங்க தலைவர் டபிள்யு.டி.சிசிரகுமார தெரிவித்தார்.

இதன்மூலம் தங்களது சங்க உறுப்பினர்களுக்கு நியாயமான தீர்வு விரைவில் பெற்றுக்கொடுக்கப்படும் என நம்பிக்கை தெரிவித்த அவர், தகுந்த நடவடிக்கைகள் அரசினால் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் கோரியுள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .