2026 ஜனவரி 26, திங்கட்கிழமை

மனைவி கொலை: கணவனுக்கு விளக்கமறியல் நீடிப்பு

Princiya Dixci   / 2017 ஏப்ரல் 25 , மு.ப. 10:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.எஸ்.எம். ஹனீபா

அம்பாறை, சம்மாந்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட காரைதீவுப் பகுதியில் மனைவியைத் தீ வைத்த கொலை செய்த குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள சந்தேகநபரான கணவனை தொடர்ந்தும் எதிர்வரும் மே மாதம் 8ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு, சம்மாந்துறை நீதவான் நீதிமன்ற நீதவான் எச்.எம்.எம். பஸீல், இன்று (25) உத்தரவிட்டார்.

கடந்த 2016 ஒகஸ்ட் மாதம் 5ஆம் திகதி இடம்பெற்ற இச்சம்பவத்தில் காரைதீவு வெட்டுவாய்க்கால் பகுதியைச் சேர்ந்த மொறிஸ் மெரினா (வயது 31) என்பவரே கொல்லப்பட்டவராவார்.

இவர்கள் திருமணம் முடித்து மூன்று மாதங்கள் கடந்த நிலையில் இருவருக்கும் இடையில் ஏற்பட்ட வாய்த்தக்கமே இக்கொலைக்குக் காரணம் என தெரிவிக்கப்படுகின்றது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X