Niroshini / 2017 ஏப்ரல் 08 , மு.ப. 06:34 - 0 - {{hitsCtrl.values.hits}}
-அப்துல்சலாம் யாசீம்
வவுனியாவிலிருந்து திருகோணமலை நோக்கி மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தவர், வெயில் காரணமாக மயக்க முற்று விழுந்த நிலையில், அவரின் பயணப்பொதியிலிருந்த 3 இலட்சத்து 07ஆயிரம் ரூபாய் பணத்தை மீட்டு அவரது உறவினர்களிடம் ஒப்படைத்த சம்பவம் ஒன்று, நேற்று நடைபெற்றது.
திருகோணமலை - உட்துறைமுக வீதியைச் சேர்ந்த முத்து தம்பி விக்ன ராஷா (49 வயது) என்பவரே மயக்க முற்றவர் என தெரியவருகின்றது.
குறித்த நபர் ஹொறவப்பொத்தான-ரத்மலை பகுதியைச் சேர்ந்த எம்.சாரிப் என்பவரின் வீட்டுக்கு முன்னாள் மயக்கமுற்று விழுந்து கிடந்த வேளை அவரின் பயணப்பொதியில் இருந்த 3 இலட்சத்து 07ஆயிரம் ரூபாய் பணமும் தங்க ஆபரணமும் கைப்பற்றப்பட்டு அவரது மனைவி பிள்ளைகள் மற்றும் உறவினர்களிடம் திருகோணமலை பொதுவைத்தியசாலையில் வைத்து ஒப்படைத்தனர்.
மோட்டார் சைக்கிளில் சென்றவர் மயக்க முற்ற போது அவரது தலையில் காயம் ஏற்பட்டுள்ளமையினால் மஹதிவுல்வெவ பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு அழைத்து செல்லப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.
32 minute ago
25 Jan 2026
25 Jan 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
32 minute ago
25 Jan 2026
25 Jan 2026