2025 செப்டெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

மருதமுனை கடற்கரையில் உருக்குலைந்த சடலம் மீட்பு

Editorial   / 2021 டிசெம்பர் 08 , மு.ப. 11:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

பாறுக் ஷிஹான்

அம்பாறை, கல்முனை பிரதேச செயலகத்துக்குட்பட்ட மருதமுனை கடற்கரையில் உருக்குலைந்த சடலம் ஒன்று, இன்று (8) காலை கரை ஒதுங்கியுள்ளது.

பொதுமக்கள் வழங்கிய தகவலுக்கு அமைய, ஸ்தலத்துக்கு வருகை தந்த மருதமுனை பொலிஸார், சடலத்தை அடையாளம் காணும் நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளனர்.

அத்துடன், சடலம் மீட்கப்பட்ட மருதமுனை கடற்கரை  பகுதிக்கு  பொலிஸாரால் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.

இம்மரணம் தற்கொலையா அல்லது கொலையா என்ற கோணத்தில் மேலதிக விசாரணைகளை  பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர். 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .