2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

மருதமுனையில் புதிய வேலை திட்டம் ஆரம்பம்

Freelancer   / 2022 ஜூலை 04 , பி.ப. 12:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

(ஏ.எல்.எம்.ஷினாஸ்)

மருதமுனை பிரதேச வைத்தியசாலை முன்னெடுத்துள்ள 30 வயதுக்கு மேற்பட்ட அனைவரையும் விசேட மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தி அவர்களுக்கான மருத்துவ அறிக்கை அட்டையினை வழங்கும் புதிய வேலை திட்டம் தற்போது பிரதேசத்தில் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

உலக வங்கியின் நிதி அனுசரணையில், கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையோடு இணைந்து பி.எஸ்.எஸ் ஆரம்ப சுகாதார சேவைகள் வலுப்படுத்தல் நிகழ்ச்சி திட்டத்தின் கீழ் இந்த புதிய வேலை திட்டத்தை மருதமுனை பிரதேச வைத்தியசாலை முன்னெடுத்துள்ளது.

முதல் கட்டமாக மருதமுனை பிரதேசத்தில் உள்ள ஆறு கிராம சேவையாளர் பிரிவுகளிலும் பொதுமக்கள் வசிக்கும் இடங்களுக்கு நேரடியாக சென்று மருத்துவ முகாம் அமைத்து ஆரம்ப சுகாதார மருத்துவ பரிசோதனையை மேற்கொண்டு அவர்களுக்கான தனித்தனியான மருத்துவ அட்டை வழங்கப்படவுள்ளது.

வேலை திட்டத்தின் ஆரம்ப நிகழ்வு பிரதேச பொறுப்பு வைத்திய அதிகாரி டொக்டர் ஏ.எல்.எம்.மிஹ்லார் தலைமையில் நேற்று (03) மருதமுனை கலாசார மத்திய நிலையத்தில் இடம்பெற்றது.

இந்த நிகழ்வில் பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையின் பிரதிப் பணிப்பாளர் டொக்டர் எம்.பி அப்துல் வாஜித் பிரதம அதிதியாக கலந்து கொண்டு, பொதுமக்கள் மத்தியில் உரையாற்றினார்.

இதில் பிரதேச மட்டத்திலான ஒருங்கிணைப்பு குழு உறுப்பினர்கள், வைத்தியசாலை அபிவிருத்தி குழு உறுப்பினர்கள், தாதி உத்தியோகத்தர்கள், சுகாதாரப் பணியாளர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

வைத்திய சிகிச்சையை பெற்றுக் கொள்வதற்காக வருகை தந்த பொதுமக்களுக்கு உணவு பழக்கவழக்கங்கள் மற்றும் இதர சுகாதார செயல்பாடுகள் குறித்தும் வைத்திய அதிகாரி டொக்டர். ஏ.எல்.எம்.மிஹ்லார் விளக்கமளித்ததுடன், நிகழ்வில் கலந்து கொண்ட அனைவருக்கும் ஏற்பாட்டாளர்கள் ஆரோக்கிய கஞ்சி வழங்கி நிகழ்வை சிறப்பித்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .