Editorial / 2021 டிசெம்பர் 06 , பி.ப. 05:09 - 0 - {{hitsCtrl.values.hits}}

நூருல் ஹுதா உமர்
திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி எஸ்.எம்.எம்.முஷாரப் மற்றும் மலேசியா நாட்டின் இலங்கைக்கான உயர் ஸ்தானிகர் ஜங் தாய் டன் ஆகியோருக்கும் இடையான சிநேக பூர்வமான சந்திப்பு, மலேசியா உயர் ஸ்தானிகர் அலுவலகத்தில் இன்று (06) இடம்பெற்றது.
இந்தச் சந்திப்பில் 65 ஆண்டுகள் பூர்த்தியை நெருங்கும் மலேசியா மற்றும் இலங்கை நட்புறவு தொடர்பான விடயங்கள் பற்றி அளவளாவியதோடு, மலேசிய நாட்டின் உல்லாசப் பயணத்துறை வளர்ச்சி மற்றும் உற்பத்தித் துறை அபிவிருத்தி மற்றும் பெருந்தொற்றுக் காலப்பகுதியில் இரு நாடுகளினதும் பரஸ்பர பொருளாதார முன்னெடுப்புகள் பற்றியும் கலந்துரையாடப்பட்டன.
மேலும், கிழக்கு மாகாணத்தில் சுற்றுலாத்துறை வளர்ச்சியில் வெளிநாட்டு முதலீடுகளின் சாத்தியப்பாடுகள் பற்றியும் மலேசியா நாட்டின் இலங்கைக்கான உயர் ஸ்தானிகர், பாராளுமன்ற உறுப்பினருடன் கலந்துரையாடியதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
3 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
4 hours ago