Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Princiya Dixci / 2021 மார்ச் 18 , மு.ப. 11:35 - 0 - {{hitsCtrl.values.hits}}
அஸ்லம் எஸ்.மௌலானா
கிழக்கு மாகாண கல்விப் பணிப்பாளர் பதவி நியமன சர்ச்சை தொடர்பான வழக்கு, ஜுலை 28ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
கிழக்கு மாகாண கல்விப் பணிப்பாளர் பதவி தொடர்பாக திருகோணமலை மேல் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்புக்கு எதிராக மாகாண கல்விப் பணிப்பாளர் எம்.ரி.ஏ.நிசாம் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த வழக்கு, நேற்று (17) பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டபோதே, மேலதிக விசாரணை மேற்படி தினத்துக்கு ஒத்திவைக்கப்பட்டிருக்கிறது.
கிழக்கு மாகாண கல்விப் பணிப்பாளராக எம்.ரி.ஏ.நிசாம் கடமையாற்றி வந்த நிலையில், 2018-10-01ஆம் திகதி அப்போதைய மாகாண ஆளுநர் ரோகித போகொல்லாகமவினால் எம்.கே.எம்.மன்சூர் மாகாண கல்விப் பணிப்பாளராக நியமிக்கப்பட்டு, கடமையாற்றி வந்தார்.
இந்நிலையில் மாகாண ஆளுநராக எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் பதவியேற்றதையடுத்து, 2019-02-01ஆம் திகதியன்று மீண்டும் எம்.ரி.ஏ.நிசாம் மாகாணக் கல்விப் பணிப்பாளராக நியமிக்கப்பட்டார்.
இதனை ஆட்சேபித்து பதவி விலக்கப்பட்ட மாகாண கல்விப் பணிப்பாளர் எம்.கே.எம்.மன்சூர், திருகோணமலை மேல் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். 2019-03-05ஆம் திகதி இம்மனு விசாரணைக்கு எடுக்கப்பட்டபோது, எம்.ரி.ஏ.நிசாமின் நியமனத்துக்கு இடைக்கால தடையுத்தரவு விதித்த நீதிமன்றம், எம்.கே.எம்.மன்சூரை மீண்டும் மாகாணக் கல்விப் பணிப்பாளர் பதவியை தொடர்வதற்கு அனுமதியளித்ததுடன், 2019-06-01ஆம் திகதியன்று மனு மீண்டும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டபோது, மன்சூர் நிரந்தரமாக மாகாணக் கல்விப் பணிப்பாளராக பதவி வகிக்க முடியும் என்ற உத்தரவை வழங்கியிருந்தது.
இதையடுத்தே பதவி நீக்கம் செய்யப்பட்ட மாகாண கல்விப் பணிப்பாளர் எம்.ரி.ஏ.நிசாம் அத்தீர்ப்பை ஆட்சேபித்து மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். அந்த மனு பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டபோது, எம்.கே.எம்.மன்சூர் மாகாணக் கல்விப் பணிப்பாளராக கடமையாற்றுவதற்கு இடைக்காலத்தடை விதித்த நீதிமன்றம், எம்.ரி.ஏ.நிசாமை மாகாணக் கல்விப் பணிப்பாளராக கடமையாற்ற அனுமதி வழங்கியிருந்ததுடன், வழக்கு முடியும் வரை இந்த இடைக்கால உத்தரவு அமுலில் இருக்கும் என அறிவித்திருந்தது.
இவ்வழக்கு, ஜுலை 28ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ள போதிலும் தற்போது கிழக்கு மாகாண கல்வி பணிப்பாளராக கடமையாற்றுகின்ற எம்.ரி.ஏ.நிசாமின் சேவைக்காலம் ஜுலை 14ஆம் திகதியுடன் பூர்த்தியாகி, ஓய்வுபெறவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
அதேவேளை கிழக்கு மாகாண கல்விப் பணிப்பாளர் பதவி இடைநிறுத்தம் செய்யப்பட்டு, மாகாண கல்வி அமைச்சில் சிரேஷ்ட உதவிச் செயலாளராக கடமையாற்றும் எம்.கே.எம்.மன்சூரின் சேவைக்காலம், ஓகஸ்ட் 23ஆம் திகதியுடன் நிறைவுற்று, ஓய்வு பெறவுள்ளார்.
26 minute ago
46 minute ago
50 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
26 minute ago
46 minute ago
50 minute ago