Freelancer / 2024 நவம்பர் 14 , மு.ப. 07:49 - 0 - {{hitsCtrl.values.hits}}
பாறுக் ஷிஹான்
9 வயதுடைய மாணவனை பல முறை பாலியல் துஸ்பிரயோகம் செய்த சந்தேகநபரான 38 வயது ஆசிரியரை 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு சம்மாந்துறை நீதிவான் நீதிமன்று உத்தரவிட்டுள்ளது.
குறித்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட மாணவனின் பெற்றோரினால் கொடுக்கப்பட்ட முறைப்பாட்டிற்கமைய சந்தேகநபரான 38 வயதுடைய ஆசிரியர் கைது செய்யப்பட்டார்.
இச் சம்பவம் அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட புற நகர் பகுதி ஒன்றில் உள்ள பாடசாலையில் இடம்பெற்றுள்ளது.
மேலும் குறித்த மாணவனை அப்பாடசாலையின் மலசல கூடத்திற்கு அழைத்து சென்று பலமுறை பாலியல் துஸ்பிரயோகம் செய்துள்ளதாக ஆசிரியர் மீது முறைப்பாடு பதிவுசெய்யப்பட்டுள்ளது.
சம்பவத்தில் பாதிக்கப்பட்ட மாணவன் தற்போது சம்மாந்துறை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகளை சம்மாந்துறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். R
39 minute ago
51 minute ago
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
39 minute ago
51 minute ago
1 hours ago
2 hours ago