2025 செப்டெம்பர் 25, வியாழக்கிழமை

மாணவர் தாக்கப்பட்டதைக் கண்டித்து சாலை மறியல்

எம்.எஸ்.எம். ஹனீபா   / 2017 ஜூன் 23 , பி.ப. 04:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

தென்கிழக்குப் பல்கலைக்கழக மாணவர் ஒருவர் தாக்கப்பட்டதைக் கண்டித்து, தென்கிழக்குப் பல்கலைக்கழக மாணவர்கள் பல்கலைக்கழக ஒலுவில் வளாக பிரதான வீதிக்கு அருகில் இன்று  (23)சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பிற்பகல் 01.30 மணிக்கு ஆரம்பித்த சாலை மறியல் போராட்டம் 02.30 மணி வரை இடம்பெற்றது. இதனால் கல்முனை -அக்கரைப்பற்று பிரதான வீதியில் களியோடைப் பாலத்தில் வாகன நெரிசல் ஏற்பட்டதோடு, அங்கு பதற்ற நிலையும் ஏற்பட்டது.

மாணவரை தாக்கிய நபர்களுக்கு தகுந்த சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டுமென பாதாதைகளை ஏந்திய வண்ணம் மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தென்கிழக்கு பல்கலைக்கழகத்துக்கு அருகாமையிலுள்ள உணவகமொன்றில் வியாழக்கிழமை (22) இரவு  பல்கலைக்கழக இரு மாணவர்கள் தேநீர் அருந்திவிட்டு பணம் கொடுக்க மறுத்துள்ளனர். இதையடுத்து உணவக உரிமையாளருக்கும் மாணவர்களுக்குமிடையில் வாய்த்தர்க்கம் ஏற்பட்டுள்ளது.

தென்கிழக்கு பல்கலைக்கழக மாணவர்கள் சைட்டத்துக்கு தெரிவித்தும், பல்கலைக்கழக மாணவர்களுக்கு விதிக்கப்பட்டுள்ள வகுப்புத் தடையை எதிர்த்தும் கடந்த 100 நாட்களுக்கு மேலாக பல்கலைக்கழக ஒலுவில் வளாக பிரதான முன்றலில் கூடாரம் அமைத்து தமது எதிர்ப்பை தெரிவித்து வந்தனர். இக் கூடாரம் இனந்தெரியாத நபர்களினால் சேதப்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இக் கூடாரத்தினுள் இருந்த மாணவரே தாக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. சந்தேகத்தின் பேரில் உணவக உரிமையாளரும், மற்றுமொருவரும் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .