2025 மே 02, வெள்ளிக்கிழமை

மாநகர சபை வாகனங்களுக்கு ஜிபிஸ் பொருத்த நடவடிக்கை

Princiya Dixci   / 2021 மார்ச் 31 , பி.ப. 12:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

பாறுக் ஷிஹான், அஸ்லம் எஸ்.மௌலானா

கல்முனை மாநகர சபை வாகனங்களை சட்டவிரோத நடவடிக்கைகளுக்காக பயன்படுத்துவதைத் தடுக்க ஜிபிஸ் தொழிநுட்பம் பொருத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக கல்முனை மாநகர மேயர் சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.எம்.றகீப்  தெரிவித்தார்.

மாநகர சபையின் 36ஆவது மாதாந்த பொதுச் சபை அமர்வு, நேற்று (30) பிற்பகல் நடைபெற்றபோது அவர் இவ்வாறு தெரிவித்தார். 

 மாநகர சபை வாகனங்கள் சட்டவிரோத நடவடிக்கைகளுக்குப் பயன்படுத்தப்படுவதாகவும் உரிய அனுமதியின்றி தனியாருக்கு வாடகை அடிப்படையில் பயன்படுத்தப்படுவதாகவும், அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் கல்முனை மாநகர சபை உறுப்பினர் சி.எம்.முபீத், குறித்த அமர்வில் சுட்டிக்காட்டி  உரையாற்றினார்.

இது விடயம் தொடர்பில் ஏனைய உறுப்பினர்களும் கருத்துகளை முன்வைத்தனர்.

இதனை தொடர்ந்து பதிலளித்த மேயர், மாநகர சபை வாகனங்களை  சட்டவிரோத நடவடிக்கைகளுக்காக பயன்படுத்துவதை தடுக்க ஜிபிஸ் தொழிநுட்பம் பொருத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

மேலும், வாகனங்கள் முறைகேடாக பயன்படுத்தப்பட்டுள்ளதாக உறுப்பினர்கள் தெரிவித்த விடயம் தொடர்பில் ஆராய்ந்து நடவடிக்கை எடுக்க ஐவர் கொண்ட குழு நியமிக்கப்பட்டு, அதன் அறிக்கை கிடைத்ததுடன், உரிய நடவடிக்கை எடுக்கப்படுமெனவும் உறுதியளித்தார். 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X