2025 செப்டெம்பர் 24, புதன்கிழமை

மீண்டும் வாகன வருமான அனுமதிகள்

Princiya Dixci   / 2021 செப்டெம்பர் 30 , மு.ப. 11:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.எஸ்.எம். ஹனீபா, ஏ.எல்.எம்.ஷினாஸ்

கிழக்கு மாகாண மோட்டார் வாகன போக்குவரத்துத் திணைக்களத்தால் பிரதேச செயலகங்கள் ரீதியாக வழங்கப்பட்டு வந்த வாகன வருமான அனுமதிப்பத்திரங்கள் நாளை (01) முதல் மீண்டும் வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, கிழக்கு மாகாண மோட்டார் வாகன போக்குவரத்துத் திணைக்களத்தின் ஆணையாளர் வ.ரவீந்திரன் அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக மாகாணத்திலுள்ள சகல பிரதேச செயலாளர்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ள சுற்றுநிரூபத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டிருந்த வாகான வருமான அனுமதிப்பத்திரம் வழங்கும் நடவடிக்கையை, சேவை பெறுனரின் நலன் கருதி, வெள்ளிக்கிழமை (01) முதல் வழமை போல் வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .