2025 மே 01, வியாழக்கிழமை

’மீள் நிதியீட்டல் நுண்கடன்’ வழங்கல்

Princiya Dixci   / 2021 மார்ச் 08 , பி.ப. 03:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.எஸ்.எம். ஹனீபா

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் சுபீட்சத்தின் நோக்கு திட்டத்தின் வறுமையற்ற இலங்கையை உருவாக்கும் திட்டத்துக்கமைய, சமுர்த்தி திணைக்களத்தால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள 'மீள் நிதியீட்டல் நுண்கடன்' வழங்கும் வைபவம்,  ஒலுவில் பாலமுனை சமுர்த்தி வங்கியில் இன்று (08)நடைபெற்றது.

சர்வதேச மகளிர் தினத்தையொட்டி, வலய முகாமையாளர் எம்.ஐ. இமாமுதீன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் முதற்கட்டமாக பாலமுனை இரண்டாம் பிரிவுக்கான அஸ்-ஸம்ஸ் சமுதாய அடிப்படை அமைப்புக்கு 50 ஆயிரம் ரூபாய் வழங்கி வைக்கப்பட்டது.

இந்த நிகழ்வில் தலைமைப்பீட முகாமையாளர் எம்.ஜே.எம். நிஹ்மதுல்லா, திட்ட முகாமையாளர் என்.ரீ. மசூர், முகாமைத்துவ பணிப்பாளர் சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர் ஏ.எல். இமாமுதீன் மற்றும் சமுர்த்தி சமுதாய குழுவின் உறுப்பினர்களும், உத்தியோகத்தர்களும் கலந்துகொண்டனர்.

சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களத்தினால் பல்வேறு அபிவிருத்தி திட்டங்கள் முன்னெடுத்துச் செல்லப்படுகின்றது. இத்திட்டத்தின் கீழ், ஒவ்வொரு கிராம சேவகர் பிரிவுகளிலுமிருந்து 20 குடும்பங்களைத் தெரிவுசெய்து 50 ஆயிரம் ரூபாய் பெறுமதியான நிதி வழங்கி வாழ்வாதாரத்தை உயர்த்துவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இவ்வருடத்தின் விசேட தினங்களை முன்னிட்டு, அரசாங்கத்தால் முன்னெடுக்கப்பட்டுள்ள வேலைத்திட்டங்களுக்கு அமையவே இக்கடன் திட்டம் வழங்கப்படுவதாக, வலய முகாமையாளர் எம்.ஜே.எம். நிஹ்மதுல்லா தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .