Princiya Dixci / 2022 செப்டெம்பர் 15 , பி.ப. 05:58 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஸ்தாபகத் தலைவர் எம்.எச்.எம்.அஷ்ரப்பின் 22ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு, அக்கரைப்பற்று அய்னாஹ் கடற்கரை மண்டபத்தில் நாளை வெள்ளிக்கிழமை (16) மாலை 3.30 மணிக்கு நடைபெறவுள்ளது.
ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீம் தலைமையில் நடைபெறும் இந்த நிகழ்வில், விசேட அதிதியாக கவிஞரும், தென்னிந்திய தமிழ்த் திரைப்பட நடிகருமான வ.ஐ.ச .ஜெயபாலன் கலந்துகொள்ளவுள்ளார்.
நினைவுப் பேருரையை தென்கிழக்குப் பல்கலைக்கழகத் தமிழ்த் துறைத் தலைவர் பேராசிரியர் ரமீஸ் அப்துல்லாஹ் நிகழ்த்தவுள்ளதோடு, "ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸும் சமகால அரசியலும்" என்ற தொனிப்பொருளில் கட்சியின் தவிசாளரும், முன்னாள் வடகிழக்கு மாகாண சபை உறுப்பினருமான ஏ.எல்.அப்துல் மஜீத் உரையாற்றுவார்.
3 minute ago
2 hours ago
17 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 minute ago
2 hours ago
17 Dec 2025