Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
ரீ.கே.றஹ்மத்துல்லா / 2019 பெப்ரவரி 12 , மு.ப. 10:42 - 0 - {{hitsCtrl.values.hits}}
சிறுபான்மைக் கட்சிகள் ஒற்றுமைப்படுவதன் மூலம், பலமான சக்தியாகி, தங்களது சமுகங்களுக்கான உரிமைகளையும், பாதுகாப்பையும் பெற்றுக்கொடுக்க முடியுமெனத் தெரிவித்துள்ள ஜாதிக பல சேனாவின் பொது செயலாளர் சங்கைக்குரிய வட்டரக்க விஜித தேரர், முஸ்லிம், தமிழ் கட்சிகள் பிரிந்து நிற்பதையிட்டு தான் கவலையடைகின்றேன் என்றும் தெரிவித்துள்ளார்.
இன ஐக்கியத்துக்கான நாடுதழுவிய பிரசாரப் பணியை, ஜாதிக பல சேனா முன்னெடுத்துள்ளது. அதன், முதலாவது நிகழ்வு, அம்பாறை, அக்கரைப்பற்றில் நேற்று (11) ஆரம்பித்துவைத்து உரையாற்றும் போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
நாட்டில் கொடிய யுத்தம் ஒழிக்கப்பட்ட போதிலும், மக்களின் பிரச்சினைகள், சமாதானம், இன ஐக்கியம், இன நல்லிணக்கம் இன்னும் ஏற்படவில்லையெனத் தெரிவித்த அவர், முஸ்லிம் கட்சிகளும், தமிழ் கட்சிகளும் பல்வேறுபட்ட பிரிவுகளாகப் பிரிந்து, பல அரசியல் கட்சிகளாகவும், இயக்கங்களாகவும் செயற்பட்டு வருவது குறித்து தான் கவலை அடைகின்றேன் என்றார்.
அரசியலை முன்னிறுத்தியே தற்போதுள்ள அனைத்து தலைவர்களும் செயற்பட்டு வருவதே, பிரிந்து நிற்பதற்குப் பிரதான காரணமாகுமெனத் தெரிவித்த அவர், இன ரீதியான கட்சிகளே, இலங்கை மக்களைக் கூறுபோட்டு வேற்றுமை உணர்வுகளைத் தோற்றுவிப்பதாகவும் அவர் கூறினார்.
இந்த நாட்டில் ஏற்பட்டிருக்கும் துர்ப்பாக்கியமான, இந்த நிலையிலிருந்து மக்களைப் பாதுகாப்பதற்காகவே எமது பயணம் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்த அவர், இது நீண்ட பயணமாவே அமையும். இதில் சகலரும் ஒன்றிணைய முடியுமென்றார்.
27 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
27 minute ago
2 hours ago