2025 மே 05, திங்கட்கிழமை

மூன்றாவது நாளாகவும் தொடரும் முடக்கம்

Princiya Dixci   / 2021 மே 16 , மு.ப. 10:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

வி.ரி.சகாதேவராஜா

கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்தும் முகமாக வெள்ளிக்கிழமையன்று (14) அரசாங்கத்தால் அமுல்படுத்தப்பட்ட பயணத் தடை, கிழக்கு மாகாணத்தில் மூன்றாவது  நாளாக இன்றும் (16) தொடர்ந்தது.

இதனால் மக்களின்  மக்களின் இயல்பு வாழ்க்கை ஸ்தம்பிதமடைந்து, கிழக்கு மாகாணம் முற்றாக முடங்கியுள்ளது.

மூன்றாவது நாளாக இன்றும் கடைகள் யாவும் பூட்டப்பட்டு, போக்குவரத்துகள் முற்றாக முடக்கப்பட்டன. மக்கள் சுயக ட்டுப்பாட்டுடன் வீடுகளை விட்டு வெளியேறாமல் ஒத்துழைத்தனர்.

கல்முனை, காரைதீவு கண்ணககை அம்மன் கோவிலின் வருடாந்த திருக்குளிர்த்திச்சடங்கு ஆரம்பமாகியுள்ள போதும், பிரதான வீதிகள் பெரும்பாலும் வெறிச்சோடிக் காணப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, நகரப் பகுதிகளில் பொலிஸார் மற்றும் முப்டையினர் ரோந்து நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X