Princiya Dixci / 2020 டிசெம்பர் 23 , பி.ப. 03:59 - 0 - {{hitsCtrl.values.hits}}

நூருல் ஹுதா உமர்
கடந்த சில வாரங்களாக கடலரிப்புக்கு இலக்கான மாளிகைக்காடு ஜனாஸா மையவாடியை அண்மித்த சாய்ந்தமருது 15ஆம், 17ஆம் பிரிவுகளுக்கான மையவாடியாக அடையாளப்படுத்தப்பட்டு, அண்மையில் அமைக்கப்பட்ட ஜனாஸா மையவாடியின் சுற்றுச் சுவரின் ஒரு பகுதி, கடலரிப்பால் உடைக்கப்பட்டு, நேற்றிரவு (22) கடலுக்குள் சரிந்துள்ளது.
அம்பாறை மாவட்டத்தின் கிழக்கு பகுதி தொடர்ந்தும் இவ்வாறு கடலரிப்புக்கு இலக்காகி வருவதால், அப்பிரதேசங்களில் வாழும் மீனவர்களும் பொதுமக்களும் கடுமையான சிக்கல்களை சந்தித்து வருகின்றனர்.
சுற்றுமதில் பூரணமாக சரிந்து, மனித எச்சங்கள் வெளிவந்துகொண்டிருக்கும் மாளிகைக்காடு ஜனாஸா மையவாடி தொடர்பில் எவ்வித நடவடிக்கைகளுமின்றி, வாய்மூலம் மட்டுமே வாக்குறுதிகள் அறிவிக்கப்பட்டு வரும் இச்சூழ்நிலையில், மேற்படி சுவரும் கடலரிப்பில் சரிந்து விழுந்திருப்பது, அப்பிரதேச மக்களுக்கு பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.
38 minute ago
3 hours ago
6 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
38 minute ago
3 hours ago
6 hours ago
6 hours ago