2025 மே 05, திங்கட்கிழமை

மோட்டார் சைக்கிள் விபத்து; ஒருவர் காயம்

Princiya Dixci   / 2021 ஜூன் 06 , பி.ப. 12:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

வி.சுகிர்தகுமார்

அம்பாறை,  ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட கோளாவில் பிரதேத்தில் நேற்று (05) இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் 65 வயது நபரொருவர் பலத்த காயங்களுக்குள்ளாகி, வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.

விபத்தில் படுகாயமடைந்தவர், அக்கரைப்பற்று 9ஆம் பிரிவை சேர்ந்த மீனவர் சங்கத் தலைவர் எனவும் இவர், பயணக் கட்டுப்பாட்டில் அனுமதி பெற்று, மீன் வியாபாரத்தில் ஈடுபட்டு வந்தவர் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

கோளாவில் பிரதேசத்தில் மோட்டார் சைக்கிளில் மீன் பெட்டியுடன் பயணித்த அவர், வீதியைக் கடக்க முற்பட்டதாகவும் இச்சந்தர்ப்பத்தில் எதிரே வந்த மற்றுமொரு மோட்டார் சைக்கிள் மோதி விபத்து இடம்பெற்றதாகவும் நேரில் கண்டவர்கள் தெரிவித்தனர்.

விபத்தில் காயமடைந்தவர் அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், விபத்தை ஏற்படுத்தியதாக கருதப்படும் மோட்டார் சைக்கிளும் பொலிஸாரால் பொலிஸ் நிலையத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளது.

விபத்து தொடர்பில் அக்கரைப்பற்று பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X