2025 மே 01, வியாழக்கிழமை

யுத்தத்தால் பாதிக்கப்பட்ட 99 குடும்பங்களுக்கு வீடுகள்

Suganthini Ratnam   / 2017 ஏப்ரல் 26 , மு.ப. 09:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.கார்த்திகேசு

அம்பாறை மாவட்டத்தில் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட 1,650 குடும்பங்கள் புனர்வாழ்வளிப்பு மற்றும் மீள்குடியேற்ற அமைச்சின் வீட்டுத் திட்டத்துக்காக தெரிவு செய்யப்பட்ட நிலையில், இரண்டாம் கட்டமாக 99 குடும்பங்களுக்கு வீடுகளை நிர்மாணித்துக் கொடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என  மாவட்டச் செயலகத்தின் திட்டமிடல் பணிப்பாளர் எஸ்.அன்பர்தீன் தெரிவித்தார்.

யுத்தத்தால் பாதிக்கப்பட்ட  56 குடும்பங்களுக்கு  மீள்குடியேற்ற அமைச்சால் திருக்கோவிலில் முதற்கட்டமாக வீடுகள் நிர்மாணித்துக் கொடுக்கப்பட்டுள்ளன எனவும் அவர் கூறினார்.

தலா வீடு 8 இலட்சம் ரூபாய் பெறுமதியில் நிர்மாணித்துக் கொடுக்கப்படவுள்ளது எனத் தெரிவித்த அவர்,  இந்த வீடுகளுக்கான நிர்மாணப் பணியை எதிர்வரும் மூன்று மாதங்களுக்குள் பூர்த்திசெய்து வீடுகளைப் பயனாளிகளிடம் கையளிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது எனவும் கூறினார்.

வீடுகளைப் பெறவுள்ள பயனாளிகளைத் தெளிவுபடுத்தும் கூட்டம். திருக்கோவில் பிரதேச செயலகத்தில் செவ்வாய்க்கிழமை (25) நடைபெற்றது.

திருக்கோவிலில்; 30 வீடுகளும் ஆலையடிவேம்பில் 26 வீடுகளும் நாவிதன்வெளியில் 18 வீடுகளும் சம்மாந்துறையில் 7 வீடுகளும் லாகுகலவில்  3 வீடுகளும் உகணவில் 6 வீடுகளும் தமணவில் 1 வீடும் மாஓயாவில்  8 வீடுகளும் தெரிவுசெய்யப்பட்ட குடும்பங்களுக்கு நிர்மாணித்துக் கொடுக்கப்படவுள்ளன எனவும் அவர் கூறினார்.  

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .