2025 மே 02, வெள்ளிக்கிழமை

யானைகளின் தொல்லையைக் கட்டுப்படுத்தக் கோரி ஆர்ப்பாட்டம்

Suganthini Ratnam   / 2017 மார்ச் 05 , மு.ப. 11:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.ஹனீபா

 ஒலுவில்  அஷ்ரப் நகர்  பிரதேச எல்லைக் கிராமங்களில் அண்மைக்காலமாக அதிகரித்து காணப்படும் காட்டு யானைகளின்  தொல்லையைக்  கட்டுப்படுத்துமாறு கோரி இன்று ஞாயிற்றுக்கிழமை (05) மாலை அஷ்ரப் நகர் கிராமத்தில் பொதுமக்கள் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

 
அரசே மின்சார வேலியை அமைத்துத் தா, வீதி விளக்குகளை பொருத்து, நல்லாட்சி அரசே யானைகளின் தொல்லைகளிலிருந்து எமது கிராமத்தை பாதுகார், வீதியின் இரு மருங்கிலும் உள்ள பற்றைக்காடுகளை அகற்று, யானைத் தாக்கத்திலிருந்து எங்களை காப்பாற்று போன்ற சுலோகங்களை ஏந்தியவண்ணம் பொது மக்கள் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.


ஒலுவில் அஷ்ரப் நகர், சம்புநகர், ஹிறாநகர் ஆகிய பிரதேசங்களிளேயே யானைத் தொல்லை அதிகரித்து காணப்படுவதால் அங்கு வாழும் மக்கள் பெரும் அச்சத்துடன் இரவு வேளையில் வாழ்ந்து வருவதாகவும், இதனால் பொருளாதார ரீதியாக மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், மக்கள் தெரிவித்தனர்.

பீதியின் காரணமாக மக்கள் மாலை நேரங்களில் தங்கள் குடியிருப்பை விட்டு வெளியேறி பாதுகாப்பை தேடி தங்கள் குழந்தைகளுடன் பாதுகாப்பான இடங்களுக்கும் சென்று காலையில்; வீடு திரும்பும் நிலை ஏற்பட்டுள்ளதாகவும் ஆர்ப்பாட்டக்காரர்கள் சுட்டிக் காட்டினர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .