Kogilavani / 2017 ஏப்ரல் 18 , பி.ப. 11:35 - 0 - {{hitsCtrl.values.hits}}
கனகராசா சரவணன்
“வடக்கு, கிழக்கில் பாதுகாப்பற்ற ரயில் கடவைக் காப்பாளர்ளாக நியமிக்கப்பட்ட 1230 பேர், 4 வருடங்களாக நிரந்த நியமனம் வழங்கப்படாமலும் சம்பளமோ உயர்த்தப்படாமலும் அடிமைகளாக நடத்தப்பட்டு வருகின்றனர்” என்று, தமிழ் தேசிய மக்கள் முன்னனியின் மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளர் தர்மலிங்கம் சுரேஷ் கண்டனம் தெரிவித்துள்ளார்.
தமக்கு, சிற்றூழிர்களாக நிரந்தர நியமனங்கள் வழங்கப்படவேண்டும் அல்லது வீதி அதிகார சபையில் வீதி பரமரிப்பாளர்களாக இருக்கும் வெற்றிடத்துக்கு தங்களை நியமிக்க வேண்டும் போன்ற கோரிக்கைகளை முன்வைத்து, 10ஆம் அதிகாலை 4 மணி தொடக்கம் பணிப் பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுவருகின்றனர்.
இது தொடர்பில் மேலும் தெரிவித்துள்ள அவர்,
“பாதுகாப்பற்ற 688 ரயில்க் கடவைகளைப் பாதுகாப்பதற்கு பொலிஸ் திணைக்களத்தினால், ஒரு நாளுக்கு 250 ரூபாய் வீதம் மாதம் 7,500 ரூபாய் சம்பளத்துக்கு, 2013 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 17ஆம் திகதி 2,064 பேர் நியமிக்கப்பட்டனர்.
இதில், 1,230 பேருக்கு இன்றுவரை நிரந்தர நியமனமோ அல்லது தற்காலிகக் கடமையாளர்கள் என்ற எந்தவிதமான எழுத்து மூலமான ஆவணங்களோ வழங்கப்படாமல் உள்ளனர்.
அரச திணைக்களம் ஒன்றில் தொடர்ந்து 180 நாட்கள் பணியாற்றினால் நிரந்தர நியமனம் வழங்கப்படவேண்டும் இருந்தும் இதுவரை அவர்களுக்கு நிரந்தர நியமனம் வழங்கப்படாமல் கட்டாயப்படுத்தி கடமைக்கு அமர்தப்பட்டுள்ளனர்.
மாவட்ட பொலிஸ் காரியாலங்களில் இவர்களுக்கான மாதாந்தம் 7,500 ரூபாய் மட்டுமே வழங்கப்பட்டுவருகிறது. இந்தச் சம்பளத்தை வைத்துக் கொண்டு இவர்கள் எவ்வாறு வாழ்கையை நடாத்துவது” என்றார்.
33 minute ago
25 Jan 2026
25 Jan 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
33 minute ago
25 Jan 2026
25 Jan 2026