Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 01, செவ்வாய்க்கிழமை
Princiya Dixci / 2017 மார்ச் 07 , மு.ப. 09:56 - 0 - {{hitsCtrl.values.hits}}
அஸ்லம் எஸ்.மௌலானா
விளையாட்டுத்துறை பிரதியமைச்சர் எச்.எம்.எம்.ஹரீஸின் இணைப்புச் செயலாளர் சட்டத்தரணி எம்.ஏ.அன்ஸில், அப்பதவியிலிருந்து இராஜினாமா செய்துள்ளார்.
தனிப்பட்ட சில காரணங்களுக்காக குறித்த முடிவினைத் தான் எடுத்துள்ளதாக, பிரதியமைச்சருக்கு எழுதியுள்ள இராஜினாமாக் கடிதத்தில் அவர் தெரிவித்துள்ளார்.
அட்டாளைச்சேனை பிரதேச சபையின் முன்னாள் தவிசாளரான இவர், ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் முன்னாள் செயலாளர் நாயகம் எம்.ரி.ஹசன் அலியுடன் இணைந்து, கட்சித் தலைவர் ரவூப் ஹக்கீமுக்கு எதிராகப் பொதுக் கூட்டங்களை நடத்தி வருகின்ற நிலையிலேயே, அவர் பிரதியமைச்சரின் இணைப்புச் செயலாளர் பதவியை இராஜினாமா செய்துள்ளதாகத் தெரியவருகின்றது.
ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் அதியுயர்பீட உறுப்பினரான எம்.ஏ.அன்ஸில், அக்கட்சியின் சமய, கலாசார விவகார பொறுப்பாளராகவும் பதவி வகித்து வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .