Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Princiya Dixci / 2020 டிசெம்பர் 31 , பி.ப. 08:07 - 0 - {{hitsCtrl.values.hits}}
எஸ்.அஸ்ரப்கான்
கல்முனை, அஷ்ரஃப் ஞாபகார்த்த வைத்தியசாலை தொடர்பாக பரப்பப்படும் வதந்திகளைத் தொடர்ந்து, நோயாளிகள் தமது நோய் நிலைமைகளுடன் வீட்டில் இருந்துகொண்டு அவதியுறுவதாக அறியக் கிடைக்கின்றது. இவ்வதந்திகளை யாரும் நம்ப வேண்டாமென வைத்தியசாலை நிர்வாாகம் அறிவித்துள்ளது.
இது தொடர்பாக வைத்தியசாலை நிர்வாத்தினரால் விடுக்கப்பட்டுள்ள விசேட அறிவித்தலில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
“தற்போது நாட்டில் நிலவி வரும் கொரோனா வைரஸ் தொற்று அபாயம் காரணமாக, அதற்கான அன்டிஜன் சோதனை மேற்கொள்ளப்படுவது குறித்து பொய்யான பிரசாரங்கள் சில சமூக ஊடங்கள் மற்றும் உறுதிப்பாடுகள் அற்ற தகவல் பரிமாற்றங்கள் காரணமாக எமது பொதுமக்கள் மிகப்பாரதூரமான தொற்றா நோய்களுடன், தமக்கான சிகிச்சைகள் எதுவுமின்றி அல்லல்படும் நிலைமை குறித்து எம்மால் கவனயீனமாக இருக்க முடியாது.
“எமது வைத்தியசாலையின் சேவைகள் வெளிநோயாளர் பிரிவில் வழமை போல் நடைபெறுகின்றமையுடன், அங்கு அன்டிஜன் பரிசோதனைகள் மேற்கொள்ளப்படவில்லை. நோயாளி ஒருவர் கொவிட் தொற்றுக்கு உள்ளாகி இருக்கிறார் என்று எமது வைத்தியர்கள் சந்தேகித்தால் மட்டுமே தொற்றுக்குள்ளானவருக்கான அண்டிஜென் பரிசோதனை நடைபெறும்.
“பற் சிகிச்சை கிளினிக் மற்றும் கண், காது, மூக்கு, தொண்டை, கிளினிக் என்பனவும் வழமை போல் நடைபெறுகின்றன. எனவே, நோயாளிகள் சிகிச்சைகள் இன்றி தங்களை வருத்திக்கொண்டு இருக்காமல், தங்களது சிகிச்சைகளை தொடர எமது வைத்திசாலைக்கு எவ்விதமான அச்சமோ, குழப்பமோ இன்றி வரலாம் என்பதைத் தெரிவித்துக் கொள்கின்றோம்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
20 minute ago
23 minute ago
28 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
20 minute ago
23 minute ago
28 minute ago