எம்.எஸ்.எம். ஹனீபா / 2017 ஓகஸ்ட் 23 , பி.ப. 06:48 - 0 - {{hitsCtrl.values.hits}}
கிழக்கு மாகாண பாடசாலைகளில் கற்பிக்கும் ஆசரியர்களுக்கான 2018ஆம் ஆண்டுக்கான வருடாந்த இடமாற்றத்துக்கான விண்ணப்பம் கோரப்பட்டுள்ளதாக, மாகாண கல்விப் பணிப்பாளர் எம்.ரீ.ஏ. நிஸாம், இன்று (23) தெரிவித்தார்.
ஒரு வலயத்திலிருந்து இன்னொரு வலயத்துக்கு விருப்பத்தின் பேரில் இடமாற்றம் பெற விரும்புகின்ற ஆசிரியர்கள், தமது வலயத்தற்கென வலய இடமாற்ற அதிகாரிகளினால் தீர்மானிக்கப்படுகின்ற சேவைக் காலத்துக்கு அதிகமாகக் கடமை புரிகின்ற ஆசிரியர்கள், முதல் நியமன வலயத்தில் நியமனக் கடிதத்தின் படி கட்டாய சேவைக் காலத்தைப் பூர்த்தி செய்த ஆசிரியர்கள், மேலும் நியமனக் கடிதத்தில் கட்டாய சேவைக் காலம் குறிப்பிட்டிருக்காவிட்டால் முதல் நியமனத்திலிருந்து ஐந்து வருடகால சேவையை, அவ்வலயத்தில் பூர்த்தி செய்த ஆசிரியர்கள் இடமாற்றத்துக்கு விண்ணப்பிக்கலாமெனவும் அவர் தெரிவித்தார்.
வருடாந்த ஆசிரியர் இடமாற்றம் தொடர்பான சுற்றுநிரூபம் மாகாணத்திலுள்ள சகல வலயக் கல்விப் பணிப்பாளர்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் கூறினார்.
வருடாந்த இடமாற்றத்துக்கு விண்ணப்பிக்கின்ற ஆசிரியர்கள், தத்தமது வலயக் கல்வி அலுவலகத்தில் மேலதிக தகவல்களைப் பெற்றுக்கொள்ள முடியுமென அறிவிக்கப்பட்டுள்ளது.
கிழக்கு மாகாண ஆளுநர் ரோஹித போகல்லாகவின் அனுமதியுடன் வெளியிடப்பட்டு கிழக்கு மாகாண ஆசிரியர் இடமாற்றக் கொள்கைக்கமைவாக இவ்விடமாற்றம் நடைபெறவுள்ளதாகவும் அவர் கூறினார்.
விண்ணப்பங்களை, எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 15ஆம் திகதிக்கு முன்னர் கல்வித் திணைக்களத்துக்கு அனுப்பி வைக்குமாறும் அவர் மேலும் தெரிவித்தார்.
16 minute ago
28 minute ago
33 minute ago
41 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
16 minute ago
28 minute ago
33 minute ago
41 minute ago