2025 மே 05, திங்கட்கிழமை

வளத்தாப்பிட்டி முடக்கம்

Princiya Dixci   / 2021 ஜூன் 04 , பி.ப. 01:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.ஏ.றமீஸ், நூருல் ஹுதா உமர், எம்.எஸ்.எம். ஹனீபா, பாறுக் ஷிஹான், எம்.சி.அன்சார்

சம்மாந்துறை பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட புதிய வளத்தாப்பிட்டி கிராமத்தின் சில பகுதிகள், நேற்று (03) முதல் முடக்கப்பட்டுள்ளதாக கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டொக்டர் ஜீ.சுகுணன் தெரிவித்தார்.

கடந்த சில தினங்களாக சம்மாந்துறை வளத்தாப்பிட்டி பிரதேசத்தில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை சடுதியாக உயர்வடைந்து வருகின்றமையால் இப்பிரதேசத்தை முடக்க வேண்டிய நிலை ஏற்பட்டதாக பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் மேலும் தெரிவித்தார்.

கடந்த மூன்று தினங்களுக்குள் இப்பிரதேசத்தில் 47 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டதுடன், இப்பகுதியில் கொரோனா தொற்றுக் காரணமாக ஒரு மரணமும் பதிவாகியுள்ள நிலையிலேயே இப்பகுதி முடக்கப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X