2025 ஏப்ரல் 30, புதன்கிழமை

விசேட அதிரடிப்படை வீரர் கைது

Princiya Dixci   / 2021 மார்ச் 01 , பி.ப. 12:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

நடராஜன் ஹரன் 

பொத்துவில் இருந்து அனுராதபுரத்துக்கு மோட்டர் சைக்கிளில் கஞ்சா கடத்திச் சென்ற விசேட அதிரடிப்படை வீரர் ஒருவரை, மட்டக்களப்பு - கல்லாறு பொலிஸ் சோதனைச் சாவடியில் வைத்து நேற்று (28) கைது செய்துள்ளதாக களுவாஞ்சிக்குடி பொலிஸார் தெரிவித்தனர்.

பொத்துவில், அறுகம்பை விசேட அதிரடிப்படை முகாமில் கடமையற்றும் அனுராதபுரத்தைச் சேர்ந்த இந்த வீரர், விடுமுறையில் மோட்டர் சைக்கிளில் வீடு செல்லும் போது, கஞ்சாவை கடத்திச் சென்ற நிலையில், பொலிஸாருக்குக் கிடைத்த தகவலின் பிரகாரம் இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளார். 

கைதுசெய்யப்பட்ட விசேட அதிரடிப்படை வீரரிடம் இருந்து 215 கிராம் கஞ்சாவை மீட்டுள்ளதாகவும்  பொலிஸார் தெரிவித்தனர்.

அத்துடன், கஞ்சா கடத்தலுக்குப் பயன்படுத்திய மோட்டார் சைக்கிளையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .