Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Princiya Dixci / 2021 மே 10 , மு.ப. 11:03 - 0 - {{hitsCtrl.values.hits}}
எம்.எஸ்.எம். ஹனீபா
பொத்துவில், அறுகம்பே பிரதேசத்தில் அண்மைக்காலமாக அதிகரித்து வரும் திருடர்களின் தொல்லையைக் கட்டுப்படுத்துவதற்கு விசேட பொலிஸ் ரோந்து சேவை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
அறுகம்பே பிரதேசத்தில் அதிகரித்து வரும் திருடர்களின் தொல்லையை கட்டுப்படுத்துவது தொடர்பாக பொத்துவில் பிரதேச சபையின் தவிசாளர் எம்.எச். அப்துல் றஹீம் தலைமையில், பிரதேச சபையின் கேட்போர் கூடத்தில் நேற்று (09) நடைபெற்ற உயர் மட்டக் கலந்துரையாடலில், இதற்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
இரவு வேளையில் இடம்பெறும் திருட்டுச் சம்பவங்களை கட்டுப்படுத்தி, திருடர்களை கைது செய்வதற்கு சிவில் உடையில் விசேட பொலிஸ் குழுவை ஈடுபடுத்தவுள்ளதாக தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இக்கூட்டத்தில் பொத்துவில் பிராந்திய உதவி பொலிஸ் அத்தியட்சகர், பொத்துவில் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி, அறுகம்பே சுற்றுலா பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி மற்றும் விடுதி உரிமையாளர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.
20 minute ago
20 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
20 minute ago
20 minute ago