2025 செப்டெம்பர் 25, வியாழக்கிழமை

விண்ணப்பங்கள் கோரல்

Suganthini Ratnam   / 2017 ஜூன் 29 , பி.ப. 01:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.ஹனீபா

2018ஆம் ஆண்டுக்கான கிழக்கு மாகாண அரச சேவை உத்தியோகஸ்தர்களின் வருடாந்த இடமாற்றத்துக்கு விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன என,  அம்மாகாணப் பிரதிப் பிரதம செயலாளர் ஏ.எச்.எம்.அன்சார் தெரிவித்தார்.

அம்பாறை, மட்டக்களப்பு, திருகோணமலை ஆகிய மாவட்டங்களில் அரசாங்க அலுவலங்களில்; தொடர்ந்து 5  வருடங்களுக்கு மேலாகச் சேவையாற்றும்  அரச முகாமைத்துவ உதவியாளர் சேவை, அபிவிருத்தி உத்தியோகஸ்தர், மொழிபெயர்ப்பாளர் சேவை, சாரதிகள் சேவை, அலுவலகப் பணியாளர் சேவை, தொழில்நுட்ப உத்தியோகஸ்தர் சேவை, ஆகியவற்றைச் சேர்ந்த உத்தியோகஸ்தர்கள் இந்த இடமாற்றத்துக்கு விண்ணப்பிக்க முடியும்.

இடமாற்ற விண்ணப்பங்களை எதிர்வரும் ஜுலை 31ஆம் திகதிக்கு முன்னர் அனுப்பப்பட வேண்டும் எனவும் அவர் கூறினார்.

புதிய இடமாற்றங்கள் 2018ஆம் ஆண்டு ஜனவரி முதலாம் திகதி முதல் அமுல்படுத்தப்படும். அதற்கேற்ப,  இடமாற்றம் கோரும் உத்தியோகஸ்தர்கள் விடுவிக்கப்பட வேண்டுமென்று திணைக்களங்கள், நிறுவனத் தலைவர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது எனவும் அவர் கூறினார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .