Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2018 மே 25 , பி.ப. 01:28 - 0 - {{hitsCtrl.values.hits}}
வி.சுகிர்தகுமார்
அக்கரைப்பற்று ஆலையடிவேம்பு சாகாம வீதியில், நேற்று (24) இரவு இடம்பெற்ற விபத்தில் வயோதிபர் ஒருவர் உயிரிழந்துள்ளாரென, அக்கரைப்பற்று பொலிஸார் தெரிவித்தனர்.
அக்கரைப்பற்று 8ஆம் பிரிவு கண்ணகி வீதியைச்சேர்ந்த சின்னத்தம்பி தங்கவடிவேல் என்பவரே, இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
அக்கரைப்பற்று சாகாமம் வீதியூடாக ஆலையடிவேம்பு நோக்கிச் சென்ற முச்சக்கரவண்டி, குறுக்கு வீதியால் வந்த துவிச்சக்கரவண்டியை மோதியதால், விபத்து இடம்பெற்றுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
விபத்தில் படுகாயமடைந்தவர், அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
சடலம் அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.
முச்சக்கரவண்டியின் சாரதியைக் கைதுசெய்துள்ள பொலிஸார், இவ்விபத்து தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .