Editorial / 2018 ஜூன் 01 , பி.ப. 12:03 - 0 - {{hitsCtrl.values.hits}}

எஸ்.எம்.அறூஸ்
விபத்துக்களை தடுக்கும் முகமாகவும், வேகக் கட்டுப்பாட்டினை செயற்படுத்தும் முகமாகவும், அக்கரைப்பற்று மாநகர சபை மேயரின் பணிப்பிற்கமைய, இன்று (01) மாநகர எல்லைக்குட்பட்ட பிரதான வீதிகள் மற்றும்
உள்ளக வீதிகளுக்கு, வேகத்தடைகள் அமைக்கப்பட்டு வருகின்றது.
இவ் வேகத்தடைகள் அமைக்கப்பட்டு வருவதை பார்வையிடுவதற்காக, மாநகர சபை மேயர் அஹட் சக்கி, மாநகர சபை உறுப்பினர்கள், மாநகரஆணையாளர் ஏ.எல். அஸ்மி, பொறியியலாளர், உத்தியோகத்தர்கள் எனப் பலரும் சென்றிருந்தனர்.
இதன் போது, அடையாளப்படுத்தப்பட்ட சில இடங்களில் ஆரம்பிக்கப்பட்ட இத்திட்டமானது, எதிர்வரும் காலங்களில் மக்களால் பரிந்துரைக்கப்படும்பொருத்தமான இடங்களிலும் அமைக்கப்படுமென, அக்கரைப்பற்று மாநகர சபை மேயர் அஹமட் சக்கி தெரிவித்தார்.

2 hours ago
2 hours ago
2 hours ago
24 Jan 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago
2 hours ago
24 Jan 2026