2025 செப்டெம்பர் 24, புதன்கிழமை

விழிப்புணர்வுக் கருத்தரங்கு

Editorial   / 2017 டிசெம்பர் 24 , பி.ப. 07:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

-றியாஸ் ஆதம்

புதிய அரசியலமைப்பு மாற்றமும்  மக்களின் எதிர்பார்ப்பையும்  ஊடக மயப்படுத்துவதின் மூலம் தூய அரசியலுக்கான பங்களிப்பை வழங்குதல் எனும் எண்ணக்கருவிற்கமைவாக, ஊடகவியலாளர்கள், அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் மற்றும் சிவில் சமூக அமைப்புக்களின் பிரதிநிதிகளுக்கான கருத்தரங்கு நேற்று (23) அக்கரைப்பற்று இணைய மண்டபத்தில் நடைபெற்றது.

அம்பாறை மாவட்ட அரச சார்பற்ற அமைப்புக்களின் இணையத்தின் தவிசாளர் திரு.வ.பரமசிங்கம் தலைமையில் நடைபெற்ற இக்கருத்தரங்கில் சட்டத்தரணி எம்.எம்.பஹீஜ் வளவாளராகக் கலந்துகொண்டார்.

இதன்போது, உள்ளூராட்சி மன்ற திருத்தச்சட்டமூலம் பற்றிய விளக்கம், வட்டாரத் தேர்தலின் நன்மை, தீமை மற்றும் அவசியம் தொடர்பான விளக்கம், அரசியலில் பெண்களின் வகிபங்கு எவ்வாறு அமைய வேண்டும் என்பது பற்றிய விளக்கம், உள்ளூராட்சி கட்டமைப்பு பற்றிய தெளிவுறுத்தல் என்பன வளவாளரினால் தெளிவுபடுத்தப்பட்டது. 

இந்நிகழ்வில் உள்ளூராட்சி மன்றத் தேர்தல் வேட்பாளர்கள், சிவில் சமூக அமைப்புக்களின் பிரதிநிதிகள், ஊடகவியலாளர்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர். இதில் பெண் வேட்பாளர்களில் பெரும்பாலானோர் பங்கேற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .