2025 மே 05, திங்கட்கிழமை

வீதியில் உருண்ட சிலிண்டர்கள்

Princiya Dixci   / 2021 மே 09 , பி.ப. 12:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

வி.ரி.சகாதேவராஜா

எரிவாயு சிலிண்டர்களை ஏற்றிச்சென்ற கனரக வாகனமொன்று, இன்று (09) காலை 10.40 மணியளவில் கோமாரி பாலத்தில் குடைசாய்ந்து விபத்துக்குள்ளானது.

அக்கரைப்பற்றிலிருந்து பொத்துவிலுக்கு எரிவாயு சிலிண்டர்களை ஏற்றிச்சென்ற கனரக வாகனத்தின் ரயர் பாலத்தில் வைத்து வெடித்த காரணத்தால் வாகனம் குடைசாய்ந்து இவ்விபத்து இடம்பெற்றதாகக் கூறப்படுகின்றது.

இந்நிலைமையை சமாளிக்க சாரதி, திடீர் பிரேக் போட்டமையால்  பாலத்தின் கீழ்  வாகனம் விழாமல் தவிர்க்கப்பட்டது.  எனினும், சிலிண்டர்கள் வீதியில் வீழ்ந்து சிதறின. அதிஸ்டவசமாக எதுவும் வெடிக்கவில்லை. அத்துடன், சாரதிக்கோ உதவியாளருக்கோ எவ்வித பாதிப்புமில்லை என நேரில் கண்ட பொத்துவில்  பிரதேச சபை உறுப்பினர் த.சுபோதரன் தெரிவித்தார்.

அப்போது வீதியால் வாகம் குறைவு என்பதால் ஏனைய வாகனங்களுக்கு எவ்வித பாதிப்புமில்லை. எனினும், சிறிதுநேரம் பொத்துவிலுக்கான போக்குவரத்து பாதிக்கப்பட்டிருந்தது.

பொத்துவில் பொலிஸார் ஸ்தலத்துக்கு விரைந்து விசாரணைகளை மேற்கொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X