2025 மே 01, வியாழக்கிழமை

வெட்டுப்புள்ளியில் குழப்பம்

கே.எல்.ரி.யுதாஜித்   / 2018 ஜனவரி 03 , பி.ப. 02:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

அண்மையில் வெளியான உயர்தரப் பரீட்சை வெட்டுப்புள்ளியில் குழப்பமான நிலையொன்று உள்ளதாகவும் அது தொடர்பில் உடனடியாக ஆராய்ந்து நடவடிக்கை எடுக்குமாறும், பெற்றோர்கள் வேண்டுகோள் விடுக்கின்றனர்.

மட்டக்களப்பைச் சேர்ந்த பெற்றோர்கள் சிலர், இவ்விடயம் தொடர்பில், பரீட்சைகள் பணிப்பாளர் நாயகத்துக்குக் கடிதம் அனுப்பியுள்ளனர். இதன் பிரதியை, கல்வியமைச்சின் செயலாளருக்கும் அனுப்பியுள்ளனர்.

மேலும், மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களிடமும் முறையிடவுள்ளதாகவும் பெற்றோர் தெரிவித்தனர்.

கலைப் பிரிவில் சமூவிஞ்ஞானப் பாடத்தில் தோற்றிய மாணவர்களுக்கு மாறுபாடான அளவுகளில் வெட்டுப்புள்ளிகள் கிடைத்துள்ளதாகவும், இது தொடர்பில் பல ஆசிரியர்களிடம் வினவியபோதும் அதற்கான விளக்கங்கள் கிடைக்கவில்லை என்றும், இத்தவ​றைச் சரி செய்து தருமாறும், பெற்றோர் வேண்டுகோள் விடுக்கின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .