2025 ஓகஸ்ட் 01, வெள்ளிக்கிழமை

வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் இளைஞன் கைது

Janu   / 2025 ஜனவரி 06 , மு.ப. 09:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

வெளிநாட்டு சிகரெட்டுகளை தன் வசம் வைத்திருந்த சந்தேக நபரை சம்மாந்துறை பொலிஸார் கைது செய்த சம்பவம்  அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை பொலிஸ்  பிரிவுக்குட்பட்ட  புறநகர் பகுதியில்  ஞாயிற்றுக்கிழமை (05) இரவு  இடம்பெற்றுள்ளது.

சம்மாந்துறை சுற்றுச்சூழல் பிரிவு பொலிஸாருக்கு  கிடைக்கப்பெற்ற  தகவலுக்கமைய   மேற்கொள்ளப்பட்ட சோதனை  நடவடிக்கைகளின் போது  மலையடிக்கிராமம் 02 பகுதியைச் சேர்ந்த 23 வயதுடைய குறித்த சந்தேக நபர் ஒரு தொகை  வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் கைதாகியுள்ளார்.

சந்தேக நபர் உள்ளிட்ட  சான்றுப் பொருட்கள் என்பன சட்ட நடவடிக்கைக்கு சம்மாந்துறை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கைகளை சம்மாந்துறை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.

பாறுக் ஷிஹான்


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .