2025 ஓகஸ்ட் 06, புதன்கிழமை

வெள்ளத்தில் சிக்கிய உழவு இயந்திரம் - 4 பேர் அதிரடி கைது

Freelancer   / 2024 நவம்பர் 28 , பி.ப. 07:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

அம்பாறை - காரைதீவு மாவடிப்பள்ளி பாலத்திற்கு அருகில் உழவு இயந்திரம் வெள்ளத்தில் சிக்கியதில் மாணவர்கள் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

 நிந்தவூர் மத்ரசா அதிபர், ஆசிரியர் மற்றும் உதவியாளர்கள் இருவரும் இன்று(28) கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேகநபர்களை தற்போது சம்மாந்துறை பொலிஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்று வாக்குமூலம் பெற்ற பின்னர் சம்மாந்துறை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தது.

இதன்போது கைது செய்யப்பட்ட அதிபர் மற்றும் ஆசிரியரை எதிர்வரும் டிசம்பர் மாதம் 2ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

ஏனைய இருவரும் சம்மாந்துறை பதில் நீதவானினால் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது

கடந்த 26.11.2024 செவ்வாய்க்கிழமை நிந்தவூர் காஷிபுல் உலூம் அறபுக் கல்லூரி மத்ரசா முடிந்ததும் குறித்த மாணவர்களுக்கு வீட்டுக்குச் செல்ல பஸ் இல்லாத காரணத்தினால் குறித்த மாணவர்களுக்கு அறிவுறுத்தல்களை வழங்கியதுடன் நிர்வாகம் மெத்தனப் போக்குடன் இவ்விடயத்தில் நடந்து கொண்டுள்ளதாக பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

மேலும் மாணவர்கள் பயணம் செய்த குறித்த வீதி ஆபத்தானது என்பதால் உழவு இயந்திரத்தில் குழந்தைகளை ஏற்றிச் செல்ல வேண்டாம் என இராணுவத்தினர் அறிவுறுத்தியிருந்தமை மேலும் தெரியவந்துள்ளது. R


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X