Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
எம்.எஸ்.எம். ஹனீபா / 2017 டிசெம்பர் 06 , பி.ப. 10:41 - 0 - {{hitsCtrl.values.hits}}
சம்மாந்துறை, மட்டக்களப்பு தரவைப் பிள்ளையார் பிரதேசத்தில், வேலி தொடர்பில் இரு குடும்பத்தாருக்கிடையே ஏற்பட்ட கைகலப்பில் மீராலெப்பை முகம்மது இப்றாகீம் (வயது 60) என்பவர் மரணமடைந்துள்ளாரென, சம்மாந்தறை பொலிஸார் தெரிவித்தனர்.
இதனையடுத்து, இரு பெண்கள் உட்பட மூவர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளனரென, சம்மாந்தறை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி பிரதான பொலிஸ் பரிசோதகர் எம்.கே. இப்னு அசார் தெரிவித்தார்.
நேற்று (05) மாலை இடம்பெற்றுள்ள இச்சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,
பொது வேலி தொடர்பாக இரு வீட்டாருக்கு இடையில் ஏற்பட்டிருந்த பிரச்சினை தொடர்பாக, சம்மாந்துறை பிரதேச சபைக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து, செவ்வாய்க்கிழமை பிற்பகல் 3 மணியளவில் அவ்விடத்துக்கு விரைந்த பிரதேச சபை உத்தியோகத்தர்கள், இங்கு பொது வேலி நிர்மாணிப்பதை நிறுத்துமாறு பணித்துள்ளனர்.
மேலும், இது தொடர்பாக விசாரணை மேற்கொள்ளப்படுமெனவும் தெரிவித்துச் சென்றிருந்தனர்.
அதன்பின்னர், அவ்விரு வீடாருக்கு இடையில் ஏற்பட்ட வாய்த்தர்க்கம் கைகலப்பாக மாறியுள்ளது. இதன்போது, மேற்படி நபர், படிக்கட்டில் தவறி விழுந்து தலையில் கடும் காயங்களுக்கு உள்ளாகியுள்ளாரென, ஆரம்பகட்ட பொலிஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது.
காயமடைந்தவர், சம்மாந்துறை அன்வர் இஸ்மாயில் ஆதார வைத்தியசாலையின் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்ட பின்னர் மரணமடைந்துள்ளாரெனத் தெரிவிக்கப்படுகின்றது.
சம்பவம் தொடர்பில் சம்மாந்துறை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago