Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 01, வியாழக்கிழமை
Editorial / 2021 ஜனவரி 03 , பி.ப. 04:56 - 0 - {{hitsCtrl.values.hits}}
நூருள் ஹுதா உமர்
சாய்ந்தமருது பிரதேச வைத்தியசாலை பொறுப்பதிகாரியாக டொக்டர் ஏ.எல்.எம்.அஜ்வத் நியமிக்கப்பட்டுள்ளார்.
இவர், வைத்தியத் துறையில் 15 வருடங்களுக்கு முன்னரே தரம் 01க்கு தகுதி பெற்ற இப்பிரதேசத்தின் சிரேஷ்ட வைத்தியர் என்பதுடன், நீண்டகால அனுபவமுடையவரும் சுகாதார அமைச்சின் கீழுள்ள பல்வேறு நிறுவனங்களில் பல பதவிகளையும் வகித்துள்ளார்.
டொக்டர் அஜ்வத், கடந்த காலங்களில் கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலை மற்றும் சம்மாந்துறை ஆதார வைத்தியசாலை என்பவற்றின் வைத்திய அத்தியட்சகராகக் கடமையாற்றியுள்ளதுடன், இறுதியாக சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரியாகக் கடமையாற்றியுள்ளார்.
இவர், சாய்ந்தமருது பிரதேச வைத்தியசாலையில் நேற்று முன்தினம் (02) தனது கடமைகளைப் பொறுப்பேற்றுக் கொண்டார்.
இதேவேளை, சாய்ந்தமருது மக்களின் நன்மதிப்பைப் பெற்ற டொக்டர் எம்.எச்.கே.ஸனுஸ் காரியப்பர், நிரந்த இடமாற்றம் பெற்று, 2021.01.01 முதல் சாய்ந்தமருது பிரதேச வைத்தியசாலையில் தனது கடமைகளைப் பொறுப்பேற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
30 Apr 2025
30 Apr 2025
30 Apr 2025