Princiya Dixci / 2022 ஓகஸ்ட் 16 , பி.ப. 05:27 - 0 - {{hitsCtrl.values.hits}}
பாறுக் ஷிஹான்
போலி நாணயத்தாள்கள் மற்றும் ஹெரோய்ன் போதைப்பொருளை தம்வசம் வைத்திருந்த குற்றச்சாட்டில் நபரொருவரை, கல்முனை விசேட அதிரடிப்படையினர் கைது செய்துள்ளனர்.
அம்பாறை - கல்முனை விசேட அதிரடிப்படை முகாமிற்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலையடுத்து, விசேட அதிரடிப்படையினர் மேற்கொண்ட தேடுதலில் கல்முனை காஸீம் வீதியில் வைத்து இன்று (16) அதிகாலை சந்தேகநபர் கைதானார்.
இவ்வாறு கைதான நபர் 39 வயது மதிக்கத்தக்கவர் என்பதுடன், சந்தேகநபர் வசம் இருந்து போலி 5,000 ரூபாய் தாள்கள் 03 மற்றும் 3 கிராம் 100 மில்லிகிராம் ஹெரோய்ன் போதைப்பொருள் என்பன விசேட அதிரடிப்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
கைது செய்யப்பட்ட சந்தேகநபரை, நீதிமன்ற நடவடிக்கைக்காக சான்று பொருட்களுடன் கல்முனை பொலிஸாரிடம் விசேட அதிரடிப்படையினர் பாரப்படுத்தியுள்ளனர்.
2 hours ago
5 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
5 hours ago
9 hours ago