2025 ஒக்டோபர் 16, வியாழக்கிழமை

இணையவழி மோசடிகளில் விழிப்பாக இருக்கவும்

R.Tharaniya   / 2025 மார்ச் 16 , மு.ப. 09:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

‘கிறிப்டோ’ என பொதுவாக குறிப்பிடப்படும் மறைக்குறி நாணயங்கள் தொடர்பில் பொதுமக்கள் விசாரணைகளையும் அவதானிக்கப்படும் அபிவிருத்திகளையும் கருத்திற்கொண்டு, இலங்கை மத்திய வங்கியானது ‘கிறிப்டோ’ நாணயங்களைப் பயன்படுத்துவதுடனும் முதலீடு செய்வதுடனும் தொடர்புடைய குறிப்பிடத்தக்க இடர் நேர்வுகள் பற்றி பொதுமக்களுக்கு ஏற்கெனவே வலியுறுத்தி இருக்கின்றது. 
இந்நிலையில், பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக ஊடகங்களில் தற்போது விளம்பரப்படுத்தப்படும் மோசடியான ‘கிறிப்டோ’ பண வர்த்தகம் தொடர்பான மோசடியான விளம்பரங்களைப் பிரதமர் அலுவலகம் வன்மையாகக் கண்டித்து அறிக்கையொன்றை விடுத்துள்ளது.


 ‘கிறிப்டோ நாணயம்’ என்ற சொற்பதமானது மறைகுறியாக்கம் மற்றும் பகிரப்பட்ட பேரட்டு தொழில்நுட்பம் அல்லது அதையொத்த தொழில்நுட்பம் போன்றவற்றைப் பயன்படுத்தி நடைமுறைப்படுத்தப்பட்டுவருகின்ற டிஜிட்டல் பெறுமதியின் பிரதிநிதித்துவத்தைக் குறிப்பிடுகின்றது. ‘கிறிப்டோ-வர்த்தகம்’, இலாபகரமான முதலீடொன்றாக சில நிறுவனங்களினால் பரந்தளவில் ஊக்குவிக்கப்படுகின்றமை அவதானிக்கப்பட்டுள்ளது. எனினும், பொதுமக்கள் தாம் மேற்கொண்ட ‘கிறிப்டோ’ முதலீடுகளின் மூலமாக பாரியளவில் நட்டங்களைச் சந்தித்துள்ளனர்.

என்றும் சில சந்தர்ப்பங்களில் ‘கிறிப்டோ’வுடன் தொடர்புடைய திட்டங்களினூடாக முன்னெடுக்கப்பட்ட நிதியியல் மோசடிகளுக்கும் ஆளாகின்றனர் என்றும் இலங்கை மத்திய வங்கிக்குக் கிடைக்கப்பெறுகின்ற அண்மைய முறைப்பாடுகள் எடுத்துக்காட்டுகின்றன.‘கிறிப்டோ’ நாணயத்தைப் பயன்படுத்துபவர்களுக்கு ஏற்படும் குறிப்பிடத்தக்க நிதியியல், தொழிற்பாட்டு, சட்ட மற்றும் பாதுகாப்புடன் தொடர்புடைய இடர் நேர்வுகள் அதேபோன்று, வாடிக்கையாளர் பாதுகாப்பு கரிசனைகள் பற்றி இலங்கை மத்திய வங்கி 2018,2021 அத்துடன், 2022ஆம்  ஆண்டுகளில் ஊடக வெளியீடுகளினூடாக ஏற்கெனவே எடுத்துக்காட்டியுள்ளது.


‘கிறிப்டோ’ நாணய வணிகங்களில் ஈடுபட்டுள்ள பல்வேறு உலகளாவிய நிறுவனங்கள் அண்மையில் தோல்வியடைந்து சில ‘கிறிப்டோ’ நாணயங்களின் பெறுமதிகளின் நிலைகுலைவு மற்றும் இழப்புடன் இவ்விடர் நேர்வுகளும் கரிசனைகளும் ஏற்கெனவே எடுத்துக்காட்டப்பட்டுள்ளன. ‘கிறிப்டோ’ நாணயங்கள் இலங்கையில்சொத்துவகுப்பொன்றாகஅங்கீகரிக்கப்படாதஒழுங்குமுறைப்படுத்தப்படாதமுதலீட்டுச்சாதனங்கள்என்பதைப்பொதுமக்களுக்குநினைவுபடுத்தப்பட்டுள்ளன. இந்த மோசடி விளம்பரங்களை சமூக ஊடகங்கள் ஊடாக ஊக்குவித்து, இலங்கை மக்களைத் தவறாக வழிநடத்தும் நோக்கில் வெளிநாட்டு நிறுவனங்கள் செயற்பட்டுவருவதுடன், பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய மற்றும் இலங்கையின் பிரபலமானவர்களின் பெயர்களைப் பயன்படுத்தி இந்த மோசடியான விளம்பரங்கள் செய்யப்படுகின்றன.


இந்த விளம்பரங்களின் முக்கிய நோக்கம் இந்த நாட்டில் உள்ள பிரபலமானவர்கள் குறித்த மக்களின் நல்லெண்ணத்தை மலினப்படுத்துவதன் மூலம் பொது மக்களைத் தவறாக வழிநடத்துவதும், பிரபலமானவர்கள் மீதான நம்பிக்கையைச் சிதைப்பதும் ஆகும் என்றும் பிரதமர் அலுவலகத்தினால் விடுக்கப்பட்டுள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆகையால், இணையவழி ஊடாக மேற்கொள்ளப்படும் மோசடிகளில் இருந்து பாதுகாப்பாக இருக்கவும்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .