R.Tharaniya / 2025 மார்ச் 19 , மு.ப. 09:32 - 0 - {{hitsCtrl.values.hits}}
இன்றைய சமூகத்தில் போதைப்பொருள் பயன்பாடு வேகமாக அதிகரித்து வருகிறது, இதனால் பல பேரழிவுகள் ஏற்படுகின்றன. இவர்களில், இளைஞர்களும் பாடசாலை மாணவர்களும் அதிகமாகப் போதைப்பொருளுக்கு அடிமையாகி இருப்பதாக சுகாதார அதிகாரிகள் கூறுகின்றனர். அதுமட்டுமன்றி, மதுவுக்கும் அடிமையாகிவிடுகின்றனர். படுக்கையில் இருந்து எழும்போதே, மது அருந்துவோரும் இருக்கின்றனர்.
அவ்வாறானவர்கள், மதுவுக்கு அடிமையாகிவிடுகின்றனர். அவர்களை அதிலிருந்து விடுவிப்பதற்காக மட்டக்களப்பு, செட்டிபாளையம் பிரதேச வைத்தியசாலையில். ‘உவகை’ நல்வாழ்வு ‘‘மையம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இந்த முயற்சியை பாராட்டவேண்டும். இவ்வாறான உவகை நல்வாழ்வு மையங்கள் நாட்டின் ஏனைய பிரதேசங்களிலும் உருவாக்கவேண்டும் என்பதே எதிர்பார்ப்பாகும்.
ஆளுமைப் பண்புகளின் முறிவுதான் போதைப்பொருள் பயன்பாட்டுக்கு அடிமையாகிவிடுகின்றனர். அவர்கள் மனக் கிளர்ச்சி நிறைந்த ஆளுமைப் பண்புகளை வெளிப்படுத்துகிறார்கள். மனக் கிளர்ச்சி மிக்க ஆளுமைப் பண்புகளில் பணிகளை சரியான நேரத்தில் முடிக்காமல் இருப்பது, தள்ளிப்போடுவது, அவசர முடிவுகளை எடுப்பது, கவனம் குறைவாக இருப்பது, எளிதில் வருத்தப்படுவது, அதிகமாகப் பேசுவது மற்றும் தொடர்ந்து பதட்டமாக இருப்பது ஆகியவை அடங்கும்.
இந்த மனக் கிளர்ச்சியான ஆளுமைப் பண்புகளை இளம் வயதிலேயே அடையாளம் கண்டு ஊக்குவிக்காவிட்டால், அவர்கள் வளரும்போது தங்கள் சோகத்தையும் தனிமையையும் போக்க அதிக ஆபத்துள்ள நடத்தைகளை நாடுவார்கள். அவர்களில், போதைப்பொருள் பயன்பாடு, மது அருந்துதல், வீடியோ கேம்கள், வேகமாக வாகனம் ஓட்டுதல் மற்றும் பாடசாலைகளைத் தவிர்ப்பது போன்ற நடத்தைகளை அவர்கள் நாடுகிறார்கள்.
முதல் பிரச்சினை, பெற்றோர்களும் ஆசிரியர்களும் குழந்தைகளுடன் இதுபோன்ற கடினமான தலைப்புகளைப் பற்றி வெளிப்படையாக விவாதிக்கத் தயங்குவதாகும். மாணவர்களுக்குப் போதைப்பொருள் என்றால் என்ன?, அவற்றின் விளைவுகள் என்ன, சிலர் ஏன் அவற்றைப் பயன்படுத்துகிறார்கள், அவை ஏன் உலகம் முழுவதும் பரவலாக உள்ளன, அவற்றால் ஏற்படும் பிரச்சினைகள் என்ன என்பதைக் கற்பிக்க வேண்டும்.
பாடசாலைகளைச் சுற்றியுள்ள சுற்றுச்சூழலின் பாதுகாப்பு குறித்து அக்கறை இல்லாதது, பாடசாலைக்கு முன்னால் உள்ள சிறிய கடைகளுக்குத் தொடர்ந்து கவனம் செலுத்தப்படாதது, பாடசாலையைச் சுற்றித் திரியும் மக்கள் மீது கவனம் செலுத்தப்படாதது. நீங்கள் போதைப் பழக்கத்திற்கு அடிமையாக இருந்தால், முதலில் ஒரு சிறப்பு மனநல மருத்துவரைப் பார்க்க வேண்டும்.
பின்னர், அவற்றிற்கு வழிவகுத்த காரணங்களைக் கண்டறிந்து, எழுந்துள்ள மனச் சிக்கல்களைக் கண்டறிந்து, பொருத்தமான சிகிச்சைகளைத் தொடங்குவது அவசியம். அது ஒரு மனநல சிகிச்சையாக இருக்கலாம், அது ஒரு சமூக சிகிச்சையாக இருக்கலாம், அது ஒரு மருந்து சிகிச்சையாக இருக்கலாம் எனினும், அடிமையாவதற்கு முன்னர், அதனை ஆராய்ச்சி செய்யாமல் இருப்பதே சிறந்தது. அதற்கு வழிகாட்டவேண்டும் என்பதே எமது அவதானிப்பாகும்.
2025.03.19
52 minute ago
13 Jan 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
52 minute ago
13 Jan 2026