2024 ஏப்ரல் 30, செவ்வாய்க்கிழமை

எச்சரிக்கையை அச்சொட்டாக பின்பற்றவும்

Editorial   / 2023 ஒக்டோபர் 25 , பி.ப. 04:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

அறிகுறிகள் இருக்குமாயின் எச்சரிக்கையை அச்சொட்டாக பின்பற்றவும்

ஒருசில மாதங்களுக்குத் தொடர்ச்சியாக வெப்பமான காலநிலை நீடித்திருக்குமாயின், மழை பெய்தாலென்ன? எனக் கேட்டவர்கள் பலர், இருந்தாலும் இப்படி அடித்து வாங்கக்கூடாது. பெய்தது போதும்தானே என மழை மீது கோபம் கொள்வோரும் இருக்கத்தான் செய்கின்றனர். எவ்வாறான வானிலை மாற்றங்கள் ஏற்பட்டாலும், அதற்குப் பின்னர் ஏதாவது வைரஸ் தொற்றுகள் பரவதான் செய்கின்றன. 

மழை ஓய்ந்த பின்னர் டெங்கு காய்ச்சல் ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகளே அதிகமாக இருக்கும். அதற்கு முன்னர் முன்னாயத்தங்களைச் செய்துகொள்வர். டெங்கு ஒழிப்பு செயற்பாடுகளில், நுளம்பு குடம்பிகள் தேங்கும் இடங்கள் அழிக்கப்படும். 
பாடசாலைகள் உள்ளிட்ட பொது இடங்களில் புகை விசுரப்படும். எனினும், தற்போதைய காலகட்டத்தில் நிலைமையே மாறிவிட்டது. 

மழை இன்னும் ஓயவில்லை. ஒவ்வொரு நாளும் வெவ்வேறு பிரதேசங்களில் மழை வெளுத்து வாங்குகின்றது. வானிலை அவதான நிலையத்தின் எதிர்வு கூரல்களையும் மழை பொய்ப்பித்து விடுகின்றது.  இதனால், சாதாரண மக்கள் பெரும் அசௌகரியங்களுக்கு முகங்கொடுக்க வேண்டிய நிலைமைக்குள் தள்ளப்பட்டுள்ளனர். 

இதற்கிடையே ஒரு வகையான வைரஸ் பரவத் தொடங்கிவிட்டது. அத்துடன், கண்நோயும், மிகவேகமாகப் பரவத்தொடங்கி விட்டன. 

இதனால், பாடசாலை மாணவர்களே அதிகமாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். கண்நோய் பரவியமையால் கொழும்பில் உள்ள பாடசாலையொன்றும் பல நாட்கள் விடுமுறையும் வழங்கப்பட்டுள்ளது. 

தனக்கு கண்நோய் ஏற்பட்டுள்ளது என தெரிந்துகொண்டால், மற்றவர்களுக்குப் பரப்பி விட்டுவிடாது கவனமாக இருக்கவேண்டும். பொது இடங்களுக்குச் செல்வதைத் தவிர்க்க வேண்டும். 

பெரும்பாலான மக்கள் வாழ்க்கையின் ஒரு கட்டத்தில் கண் பிரச்சினைகளை எதிர்கொள்கின்றனர். சில சிறியதாக இருக்கலாம், அவை தானாகவே போய்விடும் அல்லது வீட்டிலேயே எளிதில் சிகிச்சையளிக்கப்படலாம், மற்றவை பெரியவையாக இருந்தால், கவனிப்புக்கு கண் மருத்துவ நிபுணர் தேவை. ஆகையால், கண்களில் வருத்தம் ஏற்பட்டால், கண் மருத்துவ நிபுணரை நாடுவதே சிறந்தது. 

இந்நிலையில்தான், கண்நோயுடன் மேலதிகமாக காய்ச்சலுடன் கூடிய வயிற்றுப்போக்கும் பாடசாலை மாணவர்களிடையே பரவி வருவதாக பொதுச் சுகாதார பரிசோதகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.  

கண்களில் வலி, கண்ணீர், கண்கள் சிவத்தல் மற்றும் கண் அரிப்பு ஆகியவை இதன் அறிகுறிகளாகும் என்றும் தெரிவித்துள்ளது. 

தமது பிள்ளைகளுக்கு ஏதேனும் கண்நோய் இருந்தால் பாடசாலைக்கு அனுப்புவதைத் தவிர்க்குமாறு  கொழும்பு லேடி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் கண் சத்திர 
சிகிச்சை நிபுணர் டொக்டர் ஹிரண்ய அபேசேகர, பெற்றோர்களிடம் கேட்டுக்கொண்டார். 

நோய்வாய்ப்பட்ட பிள்ளைகளை முன்பள்ளி மற்றும் பாடசாலைகளுக்கு அனுப்பாமல் இருப்பதன் மூலம் இந்நிலைமையை கட்டுப்படுத்த முடியும் என அவர் பெற்றோரை வலியுறுத்தியுள்ளார்.  ஆகையால் அறிகுறிகள் இருக்குமாயின் அறிவுறுத்தல்களை  அச்சொட்டாகப் பின்பற்றுவது அவசியம்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X